பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/765

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279 விஷயம் குறித்தும் உரை நிகழ்த்தக்கூடாது. ஏதேனும் ஒரு விஷயத்தை அரசாங்கத்தாருக்கு அனுப்பி அ வர் இr உத்தரவை பெறவேண்டியது விரும்பத்தக்கது என இன்ஸ் பெக்டர் கருதினுல் அவ்வாறே செய்யலாம். (b) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் வானெல் மூலம் உரை நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டால், அல்லது வானெலி மூலம் உர்ைநிகழ்த்த விரும்பினால், அவர் தம் அதிகாரிகள் மூலம் தாம் உரையாற்ற விரும்புகிற விஷயத்தை இன்ஸ்பெக்டருக் குத் தெரிவிக்க வேண்டும். அவர் பேச விரும்பும் விஷயம் அவரது அலுவலக கடமைகளேப் பற்றி நேரடியாகவோ மறைமுகமாக்வோ தொடர்புள்ளதாயிருந்தால், அல்லது இன்ஸ்பெக்டர் அவ்வாறு அவர் பேச்சு விவரம் முழுவதையும் அனுப்ப வேண்டும் என்று கேட்டால் அவரது பேச்சின் முழு விவரத்தை அவர் அனுப்ப வேண்டும்; இன்ஸ்பெக்டரின் அனுமதி பெற்ற பிறகே வானெலியில் அவ்ர் பேச்சை ஒலி பரப்ப வேண்டும். (c) பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியர் வானெலியில் இசை நிகழ்ச்சிகள் அல்லது இதர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது குறித்தும் (a), (b) பகுதி களில் கண்டுள்ள பிரிவுகள் அவ்சியம்ான மாறுதல்களுடன் பயன்படும். 7. ஒப்பந்தக்காரர்களுடன் பணம் சம்பந்தமான தொடர்பு கொள்வது பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர்கள் ஊழி யர்கள் அனைவரும், பஞ்சாயத்து யூனியன் மன்ற ஒப்பந்தக் காரர்கள், அல்லது மன்றத்தின் கீழ் செயலாற்றும் ஏதாவது ஒரு துறையுடன் தொடர்புள்ள இதர நபருடன் ப.ை விஷயமாக எந்த விதமான விவகாரமும் வைத்துக்கொள்ளக் கூடாது, 8. கடனை தீர்க்கச் சக்தியற்றிருத்தலும் கடன் வாங்குவதையே வழக்கமாகக் கொண்டிருத்தலும் ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்ல்து ஊழியர் வழக்கமாகக் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மேற்சொன்ன அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் கடனே தீர்க்கச் சக்தியற்றவர் (இன்ஸால் வென்ஸி) என்று தீர்ப்புக் கூறப்பட்டால் அல்லது அறிவிக்கப்பட்டால்