பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/769

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 உரிமையை அவர் பயன்படுத்திக் கொள்ளப்போகும் முறை யைப்பற்றி கூடியவரையில் குறிப்பு எதையும் வெளியிடு வதைத் தவிர்க்க வேண்டும். இந்த விதி முழு நேர அலுவலர்களுக்கும் ஊழியர் களுக்கும் மட்டுமே பயன்படும். 14. அரசியலில் பங்கெடுத்துக்கொள்ளுதல் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலர் அல் லது ஊழியரும் அரசாங்கத்தாரின் பொது அல்லது விசேஷ உத்தரவுக்கு உட்பட்டு, இந்திய நாட்டில் அல்லது இந்திய நாட்டின் விவகாரங்களுக்குத் தொடர்புள்ள ஒரு அரசியல் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது; பொருள் உதவக்கூடாது அல்லது எந்த வகையிலும் உதவிபுரியக் கூடாது. ஓர் அலுவலர் அல்லது ஊழியர் எடுக்க உத் தேசித்துள்ள நடவடிக்கை இந்த விதியை மீறுவதாக அமை யுமோ எனச் சந்தேகம் ஏற்படும் விஷயத்தில் அதைப்பற்றி அவர் கமிஷனர் மூலமாக இன்ஸ்பெக்டருக்கு அறிவிக்க வேண்டும். அவர் செய்யும் தீர்மானம் முடிவானதாகும். குறிப்பு : ஒர் அலுவலர் அல்லது ஊழியர் மேற்கண்ட செயல் களுக்கு உடந்தையாக இருந்தாலும் தேச விசுவாசமில்லாமல் ஏதாவது பேசிலுைம் வேலேயிலிருந்து நீக்கப்படுவார். 15. அலுவலர்களும் ஊழியர்களும் தங்களுடைய குடும் பத்தின் செயல்களுக்குப் பொறுப்பு பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியரின் மனேவி அல்லது அவருடன் வசிக்கும் அல்லது ஏதாவது ஒரு வகையில் அவரைச் சார்ந்துள்ள அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் விதியை மீறும் வகையில் செய்த செயலுக்கு மேற்படி அலுவலர் அல்லது ஊழியர் பொறுப்பு ஏற்க வேண்டும். 16. அலுவலர் அல்லது ஊழியரின் நடவடிக்கை அல்லது நடத்தையின் உரிமையை நிலைநாட்டுதல் பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் அபவாதமான தாக்குதல்களினின்று தம்முடைய அலுவலக நடவடிக்கைகள் அல்லது நடத்தையின் உரி மையை நிலைநாட்ட கமிஷனரின் முன் அனுமதியைப்