பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 கடைசியாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் இணைந்த தீர்மானத்தை வாசித்து அதன்மீது ஒட் எடுக்க வேண்டும். . . பெரும்பான்மையோரின் ஆதரவு இருந்தால் தீர்மானம் நிறைவேறியதாகக் கொள்ள வேண்டும். -- 34. காஸ்டிங் ஒட்' என்ருல் என்ன? ஒரு தீர்மானம் விவாதிக்கப்பட்டு ஒட்டுக்கு விடப்படு கிறது என்று வைத்துக் கொள்வோம். மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாக ஐந்து பேர்களும்; எதிராக ஐந்துபேர்களும் ஒட் அளிக்கிருர்கள் என்று வைத்துக் கொள்வோம். எப்படி முடிவு செய்வது ? தீர்மானம் தோற்றது என்று சொல்வதா ? நிறைவேறியதாகக் கொள்வதா ? இத்தகைய சந்தர்ப்பம் ஏற்படும் போது, சபைத் தலை வருக்கு அதிகப்படியாக ஒட் ஒன்று உண்டு. அதற்குத்தான் காஸ்டிங் ஒட்’ என்று பெயர். இதை அவர் கட்டாயம் உபயோகித்துத்தான் ஆக வேண் டும், நடுநிலைமை வகிக்கக்கூடாது. தலைவர் தமது காஸ்டிங் ஒட்டை அளிப்பதைப் பொறுத்தே தீர்மானம் பற்றி முடிவு செய்ய வேண்டும். 35. அவசரக் கூட்டம் கூட்டுவது எப்படி ? {மூன்று நாள் நோட்டீஸ் இல்லாமல் கூட்டப்படும். கூட்டத்துக்குத்தான் அவசரக் கூட்டம் என்று பெயர்.) இத்தகைய கூட்டங்களைத் தலைவர் கூட்டலாம். அங்கத்தினர்கள் சிலர் சேர்ந்து அவசரக் கூட்டம் கூட்டும் படியும் தலைவரைக் கேட்கலாம். அப்படிக் கேட்பது எழுத்து மூலமாக இருக்கவேண்டும். பஞ்சாயத்து அங்கத்தினர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு குறையாதவர்கள் அதில் கையொப்பம் இட்டிருக்க வேண்டும். எந்தத் தேதியில், என்ன காரியத்துக்காக அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதில் தெரிவிக்க வேண்டும்.