பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/785

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299 26. வசூலிக்க முடியாத வரிகள், கட்டணங்கள் (ப. ச. 127) விதிகள் 1. பஞ்சாயத்துச் சட்டத்தின் 127-வது பிரிவின்கீழ் வசூலிக்க முடியாத வரி, கட்டணம் அல்லது அதற்குக் கடகை உள்ள வேறு தொகை ஆகியவற்றைத் தள்ளுபடி செய்வதற்கு பஞ்சாயத்து யூனியன் மன்றத்திற்கு உள்ள அதிகாரம், ஒப்பந்தத்தின் கீழ் இருந்தாலும் அல்லது வேறு வகையில் இருந்தாலும் அடியிற்கண்ட விதிகளில் குறிப்பிடப் பட்டுள்ள நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்ட இாகும. 2. வசூலிக்க முடியாதது எனக் கண்ட தொகைகளே, வரி வசூலிப்பவர் அல்லது கிராமத் தலைவர் அல்லது மேற்படி சட்டத்தின் 126-வது பிரிவின்கீழ் வரிகள் அ ல் ல து கட்டணங்களே வசூலிக்கும் வேலே ஒப்படைக்கப்பட்ட நிலவரி இலாகாவை சேர்ந்த ஊழியர்களில் எவரேனும் அதற்கான காரணங்களுடன் அறிவிக்க வேண்டும். அவை கமிஷனரால் சரிபார்க்கப்பட வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை அத்தகைய சகல தொகைகளின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். மேற்படி தொகைகளேத் தள்ளு படி செய்வதற்கு கமிஷனர் அளித்த காரணங்களுடனும் சிபாரிசுகளுடனும் மேற்படி பட்டியல் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அடுத்த கூட்டத்தில் அனுமதிக்காகச் சமர்ப் பிக்கப்பட வேண்டும். கமிஷனர், அவ்வாறு தொகையைத் தள்ளுபடி செய்யச் சிபாரிசு செய்வதற்கு முன்பாக, வரி கொடுக்காமல் தவறு செய்பவருக்கு அந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ சொந்தமான சொத்து இல்லே என்ப தையும், மீண்டும் வரியை வசூலிக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன என்பதையும், அவ்வாறு செய்தும் பலன் அளிக்கவில்லே என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். 3. இவ்வாறு தள்ளுபடி செய்யும் தொகைகளேப்பற்றிக் குறித்துக் கொள்வதற்காக, அரசாங்கத்தினர் நிர்ணயித் துள்ள நமூனப்படியுள்ள பதிவேடு ஒன்றை வைத்து வர வேண்டும். -