பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 38. துணைக் கேள்விகளை கேட்பது எப்படி? குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு தலைவர் பதில் அளித்து விடுவார். பிறகு, அந்த விஷயம் குறித்து மேலும் சற்று விளக்கம் பெறுவதற்காக அங்கத்தினர்கள் தொடர்ந்து கேள்வி கேட்கலாம். அப்படிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு துணைக்கேள்விகள் என்று பெயர். துணைக் கேள்விகளை ஏற்றுக் கொண்டு பதில் சொல்வதும், திராகரிப்பதும் தலைவருடைய இஷ்டத்தைப் பொறுத்தது. துணைக் கேள்விகளுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டிய தில்லை. சில கேள்விகளுக்கு விஷயங்களை நன்முகத் தெரிந்து கொண்டு பதில் சொல்ல வேண்டியிருந்தால் தலைவர், அதற்கு, நோட்டீஸ் வேண்டும் என்பார். 39. துணைக் கேள்விகளை எப்போது நிராகரிக்கலாம்? துணைக் கேள்வியானது, பிரதான கேள்விக்கு சம்பந்தம் ல்லாமல் இருக்குமானல், அந்த துணைக் கேள்வியைத் தலைவர் | ரு ஞ) శ్రీ நிராகரித்து விடலாம். துணைக் கேள்வியானது வரம்பு மீறிய முறையில் இருந்: தாலும் தலைவர் பதில் சொல்ல மறுத்து விடலாம். சில துணைக் கேள்விகளுக்கு நோட்டீஸ் வேண்டும் என்று: சொல்லி விடலாம். 洛 அந்தக் கேள்வியைத் தக்க நோட்டீஸ் கொடுத்து அடுத்தகூட்டத்தில் கேட்கலாம். கேள்விகள் சம்பந்தமாகவும் பதில் குறித்தும் எவ்வித விவாதமும் செய்யக்கூடாது. 40. பதில் சொல்வது எப்படி? பதில் அளிக்க வேண்டிய கேள்விகளே தலைவர் வரிசைக் கிரமமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். கூட்டம் தொடங்கியதும், வரிசைப்படி தலைவர் ஒவ்வொரு கேள்வியாகப் படித்து, அதற்கு உரிய பதிலேயும் தெரிவிக்க வேண்டும்.