பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/795

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309 80. பொது அல்லது தனிப்பட்ட மார்க்கெட் பற்றிய அதிகாரம் ப. ச. 178. (2) (37), (ப. ச. 179. (1) விதிகள் 1. ஒரு பொது மார்க்கெட்டில், அந்தச் சமயத்தில் அமுலிலிருந்து வரும் துனேவிதிகளே மீறியிருப்பவரை அல்லது அவ்வாறு மீறியிருக்கிற அவருடைய வேலையாளேப் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் அந்தச் சந்தையிலிரு வெளியேற்றலாம்; அந்த நபர் அல்லது அவருடைய வேல் ஆட்கள் அல்லது ஏஜெண்டுகள் அந்தச் சந்தையில் தொடர்ந்து வியாபாரம் செய்வதனின்றும், அல்லது தொழில் நடத்துவதனின்றும், அல்லது அங்கு ஒரு கடைய்ை, ஸ்டாலே அல்லது இதர இடத்தை அனுபோக்த்தில் தொடர்ந்து வைத்துக்கொள்வதனின்றும் அந்த நபரைத் தடுக்கலாம்; அந்த நபர், அந்தக் கடை, ஸ்டால் அல்லது இடம் விஷய மாக வைத்திருக்கக்கூடிய குத்தகையை அல்லது உரிமையை இழந்து விடச் செய்துவிடலாம். 2. தனியார் சந்தையின் சொந்தக்காரர், அனுபோக தாரர் அல்லது குத்தகைதாரர் அடியிற் கண்டவற்றைச் செய்யவேண்டும் என பஞ்சாயத்து யூனியன் மன்றம் அவருக்கு அறிவிப்பு அனுப்பி உத்தரவிடலாம்: (a) அருகாமையில் உள்ள சாலைகள், நுழை வாசல் கள், நடைவழிகள், வாசல்கள், கழிவுநீர் வடிகால்கள், சாக் கடைகள் ஆகியவற்றை அந்தச் சந்தையில் கட்டுவதுடன், அந்தச் சந்தையில் பஞ்சாயத்து யூனியன் மன்றம் தகுதி யெனக் கருதக்கூடிய விவரமும், நிலேயும் எண்ணிக்கையும் கொண்ட கக்கூஸ் இகளே ஏற்படுத்துதல்; (b) அந்தச் சந்தை முழுவதற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு மேற்கூரை போடுவதுடன், கீழே தளவரிசை போடுதல், கசியாமலும் சுத்தப்படுத்துவதற்கு ஏற்ற வகை யிலும் உள்ளது என்று பஞ்சாயத்து யூனியன் மன்றம் கருது கிற பொருளைக்கொண்டு அதன் ஒரு பகுதியில் தளவரிசை போடுதல்;