பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/815

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329 தினர் ஆரம்பித்துள்ள தொழிற்சாலைகளிலிருந்தும் வாங்கிய பொருள்கள். (iii) குப்பை வண்டிகளே இழுக்கவும், இதர காரியங் களுக்கும் எருதுகளே வாங்குதல் ; (iv) அரசாங்கத்தார் அல்லது அவர்களது ஏஜண்டு வெளியிட்ட உத்தரவுகளின் மேல் பிறப்பிக்கப்பட்ட ஒர் அனுமதிச் சீட்டின் மூலம் கட்டுப்பாடுடைய விலைகளில் வாங்கிய பொருள்கள் ; (v) பங்கிடுவதற்காகவும், வழங்குவதற்காகவும், நிறு வனங்களிலிருந்து அல்லது அவர்களது அதிகாரம் பெற்ற ஏஜண்டுகளிடமிருந்து தற்காலிகமாக அமுலில் உள்ள விகிதங்களில் வாங்கிய பெட்ரோல் ; 9. முந்திய விதிகளிலே என்ன சொல்லியிருப்பினும், பிரதேச இன்ஸ்பெக்டர், போதிய காரணத்தை முன்னிட்டு, குறிப்பிட்ட ஏதேனும் ஒரு விஷயத்தில் அல்லது ஏதாவது ஒரு வகை விஷயத்தில், பஞ்சாயத்து யூனியன் மன்றம் டெண்டர்களே வரவழைக்க வேண்டாம் என்று உத்தர விடலாம். அல்லது மேற்படி விதிகளில் கண்டுள்ள பிரிவு களில் ஏதாவது ஒன்று அனுசரிக்கப் படாததை மன்னித்து விடலாம். 44. குற்றங்களை ராஜி செய்து கொள்ளுதல் [(L. F. 167)] விதிகள் பஞ்சாயத்துச் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் தண்டிக்கப் படத்தக்கவையும், கீழேயுள்ள அட்டவணேயின் முதல் பத் தியில் குறிப்பிட்டுள்ளவையுமான குற்றங்கள், ராஜி செய்து கொள்ளத்தக்கவையாகும்; அல்லது எந்த நீதி மன்றத்தில் அந்தக் குற்றங்கள் சம்பந்தமாக வழக்கு முடிவு ஆகாமல் இருக்கிறதோ அந்த நீதி மன்றத்தின் அனுமதியுடன் அவை ராஜி செய்து கொள்ளத் தக்கவையாகும். III—22