பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கிக்கும் வார்த்தைகளோ ஆட்சேபிக்கத்தக்கது எ ன்று வேருெரு அங்கத்தினர் கருதி, அதைத் தலைவருடைய கவனத் துக்குக் கொண்டு வந்தால் அதுவும் ஒழுங்குப் பிரச்னேதான். ஒழுங்குப் பிரச்னையை எழுப்ப விரும்புகிறவர் எழுத்து நின்று தலைவரை நோக்கி ஒரு ஒழுங்குப் பிரச்னை என்பார். 'பாயின்ட் ஆஃப் ஆர்டர்’ என்று ஆங்கிலத் தி லும் சொல்லலாம். அப்போது யாராவது பேசிக் கொண்டிருந்தால் உடனே நிறுத்திவிட வேண்டும். ஒழுங்குப் பிரச்னை எதைப்பற்றியது என்பதை அதை எழுப்பிய அங்கத்தினர் சொல்வார். தலைவர் அதன் மீது தமது தீர்ப்பை வழங்குவார். இதன் பிறகே சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தலாம். எழுப்பப்படும் ஒழுங்குப் பிரச்னை முறையாக இல்லே என்று தலைவர் கருதினால், அதை நிராகரித்து விடலாம். அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயத்தின் மீதே தீர்ப்புக் அrற வேண்டும். 45. தலைவருடைய தீர்ப்பை எதிர்க்கலாமா? ஒழுங்குப் பிரச்னை குறித்து தலைவர் அளிக்கும் தீர்ப்பே முடிவானது. அந்த முடிவு குறித்து எவ்விதமான விவாதமும் அங்டTது. ஒழுங்குப் பிரச்னை குறித்து தலைவர் அளிக்கும் தீர்ப்புக்கு அங்கத்தினர்கள் கட்டுப்பட வேண்டும். எதிர்த்துப் பேச எவருக்கும் உரிமை கிடையாது. அப்படி எவரேனும் செய்தால் அது முறை தவறியதாகும். அதனுல் சபையின் கெளரவம் பாதிக்கப்படும். 46. தீர்மானத்தை நிறுத்தி வைக்கலாமா? பஞ்சாயத்து சபை நிறைவேற்றும் தீர்மானங்களை அமு லுக்கு கொண்டுவர வேண்டியவர் நிர்வாக அதிகாரி, மேற்படி தீர்மானங்களை நிறுத்தி வைக்கவோ நிராாரிக்கவோ நிர்வாக அதிகாரிக்கு உரிமை கிடையாது.