பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/832

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 டெபுடிக் கலெக்டர்களுக்கு பயிற்சி வசதிகள் சப்-டிவிஷன் அளவில் துணைக் கலெக்டர்கள் வகிக்கும் முக்கியமான நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு 10. தினங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்வேறு அபிவிருத்தித் துறைகள், வளர்ச்சி முறைகள் ஆகியவற்றைப் பற்றிய பூர்வாங்கமான படிப்பில் காந்தி கிராமத்தில் ஐந்து தினங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமத் தொழில்கள், அவற்றின் வேலைகள் ஆகியவற்றைப்பற்றி தே, கல்லுப் பட்டியில் ஐந்து தினங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படு கிறது. இது முழுவதும் ராஜ்ய அரசாங்கத்தாராலேயே நடத்தப்பட்டு வருகிறது. சமூகக் கல்வி அமைப்பாளர்களுக்கு வேலைப் பயிற்சி சமூகக் கல்வி அமைப்பாளர் பயிற்சி நிலேயங்களில் சமூகக் கல்வி அமைப்பாளர்களுக்கு (ஆண்களுக்கு) ஆறு மாதங்களுக்கும், (பெண்களுக்கு) 10 மாதங்களுக்கும் பணிப் பயிற்சி அளிக்கிரு.ர்கள். இந்திய அரசாங்கத்தினர் ஒதுக்கும் ஸ்தாபனங்களுக்கு ஏற்ப அவர்கள் தொகுதிகளில் சென்று பயிற்சி பெறுகிருர்கள். 11. வேலைப் பயிற்சி (1) வட்டார அபிவிருத்தி அதிகாரிகள் கல்லுப்பட்டியிலுள்ள காந்தி கிராமம் ஆசிரமத்தில் 15 தினங்களுக்கு கிராமத் தொழில்களில் பயிற்சி அளிக்கப் படுகிருர்கள். கடன்கள் சம்பந்தமாகவும், அலுவலக நடை முறை விஷயமாகவும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படு கிறது. ரெவினியூ இலாகாவிலிருந்து வேலேயில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் நீங்கலாக, மற்ற வட்டார அபி விருத்தி அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட சர்வேயர் களால் தொடர்ச்சியான ஒரு வார கால அளவுக்கு சர்வே பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (2) சமூகக் கல்வி அமைப்பாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியுள்ள சமூகக் கல்வி அமைப்பாளர்களுக்கு சமூகக் கல்வி அமைப்பாளர் பயிற்சி நிலையங்களில் இரண்டு மாத கால மறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தினர் ஒதுக்கியுள்ள