பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"சங்கம் வைப்பது என்ன தப்பான காரியமா? நூல் வியாபாரிகளும், முதலாளிகளும் தமக்கென்று சங்கம் வச்சிக்கிறபோது, நீங்க மட்டும் வைக்கக் கூடாதா? சமூக சேவைக்கென்று தொடங்கிய பத்திரிகையைக்கூட, முதலாளிகள் தங்கள் சௌகரியத்துக்குத்தானே உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்! இதெல்லாம் உங்களுக்குத் தெரியாத விஷயமா,என்ன?"

"அதெல்லாம் முதலாளிமாருங்களுக்குச் சரி தம்பி. நாமளும் அந்த மாதிரி செய்யப்படுமா?" என்று கேட்டார் சுப்பையா முதலியார்.

வடிவேலு முதலியார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கச் சுப்பையா முதலியார் மீது சீறி விழுந்தார்.

"வே.சப்பையா முதலியார்! முதலாளிக்கு ஒரு வழக்கு, நமக்கு ஒரு வழக்கா? வாயைப் பொத்திக்கிட்டு ஒரு இடத்தில கிடையும். உம்மை மாதிரி, இருக்கிறவன் காலைச் சுத்திவந்து, எச்சிப் பிழைப்புப் பிழைக்க நாங்க தயாராயில்லெ. உபகாரம் இல்லாவிட்டாலும் உபத்திரமாவது பண்ணாமெ இரியும்!"

எங்கே வார்த்தை தடித்து விடுமோ என்று பயந்த அங்கிருந்த பெரியவர் இருவரையும் கையமர்த்தி, "எதுக்கு வாயைக் குடுத்து வாயை வாங்குதிய? தம்பி கிணத்திலே விழுங்கன்னு சொன்னா, உடனே நாம விழுந்துடவா போறோம்? நாலும் யோசிச்சி நல்லதுன்னா செய்வோம். இதுக்கு ஏன் வீன்சண்டை என்று சாவதானமாகப் பேசிச் சமரசம் செய்து வைத்தார்.

"ஆமா தம்பி, சர்க்காரோடே போராடணும். அப்படியிப்படிங்கிறியே அதென்ன நடக்கிற காரியமா?" என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார் ஒரு நெசவாளி,

சங்கர் அவர்களது கேள்விகளுக்கெல்லாம் உற்சாகத் தோடு பதில் கூறத் தயாராயிருந்தான்; அவர்கள் கேள்வி