இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


"ரெண்டு சுருட்டு குடுங்க. வாய்க்காங்கரைப் பக்கம் போகனும் "என்றார்.

வாங்கியசுருட்டில்ஒன்றைப்பற்றவைத்துக்கொண்டு, "வாய்க்காங் கரைக்கு யாராவது வர்ரியளா?" என்று கேட்டார்.

சுப்பையா முதலியார் தமக்கு வேறு வேலை யிருப்பதாகக் கூறிக்கொண்டு விடைபெற்று, எதிர்த் திசையில் திரும்பினார். சுப்பையா முதலியார் சென்றதும், தொடையைக்கிள்ளிச்சாடைகாட்டியநெசவாளிவாயைத் திறந்தார்.

"என்ன அண்ணாச்சி, பக்கத்திலே நாரதாமுனி சுப்பையா நீக்கயிலேயே நீங்க மைனர்வாளைப் பத்திவிளாசித் தள்ளுதியளே" என்று பாதி அங்கலாய்ப் புடனும்பாதிப்பாராட்டுடனும்கூறினார்.

"வேணுமின்னுதான் தம்பி சொன்னேன். இப்போ அவர் நேரா மைனர் முதலியாரிடம்போய், அத்தனை விசயத்தையும் ஒண்னுவிடாமே, இறக்கி வச்சிட்டுத்தானே மறுவேலை பார்ப்பார்! அதுக்குத்தானே சொன்னேன்" என்றுபெருமிதத்தோடுசொன்னார்வடிவேலு.

"நீங்கஎதுக்கும் துணிஞ்சவங்கதான், அண்ணாச்சி"

"துணிஞ்சவனுக்குத்தான் தம்பி, துக்கமில்லை!" என்று அனுபவ வாயிலாகப் பிறந்த நீதிவாக்கியத்தை உதிர்ந்துவிட்டு, வாய்க்காலைநோக்கி நடக்க முனைந்தார் வடிவேலுமுதலியார்.


2

அம்பாசமுத்திரம் திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரபருணி நதியின் தலைப் பகுதியிலுள்ள ஊர், ஊருக்குத் தெற்கே, அம்பாசமுத்திரத்துக்கும் கல்லிடைக்