இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


குறிச்சிக்கும் எல்லை கிழித்தமாதிரி, ஸ்படிகத் தெளிவு கொண்ட தாமிரபருணி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஊருக்கு மேற்கே ஐந்தாறு மைல் தொலைவில், மேற்குத் தொடர்ச்சிமலை மஞ்சு தவழும் முகடுகளோடு, அரண் வகுத்துக் கோட்டைச் சுவர் மாதிரி வானளாவி நிற்கிறது. மலைத்தொடரின் அடிவாரத்தில்,தமிழ் பிறந்த தென்னன் பொதிகைச் சாரலில், வெள்ளைக்காரப் பெரு முதலாளியானஹார்வியின் பஞ்சாலைகொடிகட்டி ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆகஸ்டுச் சுதந்திரத்தின் அபிநவபாண்டிய குமாரனாக, ஹார்விதென் பாண்டிநாடு முழுவதிலும் கால் பரப்பி, அந்தப் பகுதியின் பொருளாதாரத்தின்மீதுபேராதிக்கம் செலுத்திவருகிறான். - ஹார்லி மில்லுக்கு பேட்லே மலைமீது முண்டந்துறை என்ற கீழணைப் பிராந்தியத்தில் பாபநாச ஜல மின்சார உற்பத்தி நிலையம் கொலுவீற்றிருக்கிறது. தாமிரபருணித்தாய் வாரி வழங்கும்மகாசக்தியான மின்சாரத்தைக்கூட, அவளுடைய மக்களான நெல்லை ஜில்லாவாசிகளுக்கு ஒருவெள்ளையன் தான் தரகுக்காரனாக இருந்து வினியோகித்து வருகிறான். மின்சார நிலையத்துக்கு மேலாக, பழைய நீலகண்டன் கசம் இருந்த இடத்தில், 'அப்பர் டாம்' என்ற காரையார் அணைக்கட்டும், அணைக்கட்டினால் ஏற்பட்ட 'ஆர்தர் ஹோ ஏரி'யும் இருக்கின்றன மலையடிவாரத்தில் குடியேறிவிட்ட யந்திர வளர்ச்சியின் காரணமாக, அம்பாசமுத்திரத்திலிருந்து காரையாருக்குச் செல்லும் ரோட்டிலும், மலைப் பாதையிலும் சதா சர்வகாலமும் லாரிகளும், பிளஷர் கார்களும், பஸ்களும் பறந்தோடிய வண்ணமாய் இருக்கும் அம்பாசமுத்திரத்துக்குக் கிழக்கே ஐந்தாறு மைல் தூரத்தில் வீரவநல்லூர் என்ற இடைகழி ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில், அந்த வட்டாரத்துக்குப் பெருமுதலாளிகளான, இந்தியாவின் சிறு முதலாளிகளின் பகிரத முயற்சியினால் தொடங்கப் பெற்ற புதிய டெக்ஸ்டைல் மில் ஒன்றும் இருக்கிறது.மலைவிழுங்கி மகா தேவனாக விளங்கும் விக்கிரமசிங்கபுரத்து ஹார்வி