இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


ரோட்டின் இடது புறமாகச் செல்லும் தெருவின் மத்தியில் தான் லோகநாயகி அம்மன் கோயில் இருக்கிறது.

அம்மன் கோயிலுக்கு எதிரிலும், பக்கத்திலுமுள்ள தெருக்களில் அருணோதய காலங்களில் சூரிய தேவனுக்கு வானவில்லை நெளிசல் எடுத்து நடை பாவாடையாக விரித்துப் போட்டது போல், பாவு தோய்க்கும் கோலாகலக் காட்சி தெரு நிறைந்து ஒளி செய்யும். அம்மன் கோயிலுக்கு எதிராகச் செல்லும் சந்நிதித் தெருவின் கடை கோடி யிலுள்ள காரை வீடுதான் மைனர் முதலியார்வாளின் வீடு. மேலத் தெருவின் மத்தியில் எடுத்துக் கட்டிய புதிய மாடியோடு உள்ளது கைலாசம் முதலியாரின் வீடு அதற்கும் அப்பால், தன்னந் தனியாக, தெரு ரோட்டோடு கலக்கும் சங்கம முகத்தில், காம்பவுண்டு சுவர் வளைந்து, காடியானாவும், கார்ஷெட்டும். பூஞ்செடிகளும் உள்ள பங்களா வீடுதான் பெரிய முதலாளி என்று மதிக்கப்படும் தாதுலிங்க முதலியாரின் 'மங்கள பவனம்'.

சந்நிதித் தெருவின் கடைகோடி வீட்டு முன் வாசலில் ஒரு கறுப்பு நாய் தூங்காமல் தூங்கிச் சுகம் கண்டு கொண்டிருந்தது.

சுப்பையா முதலியார் அந்த வீட்டு வாசலில் நின்று கொண்டு, "அண்ணாச்சி, அண்ணாச்சி" என்று பவ்வியத்தோடு குரல் கொடுத்தார். குரலைக் கேட்டதும், வாசலில் படுத்திருந்த நாய் எழுந்து நின்று வறட்டுக்குரலில் குலைக்கத்தொடங்கியது.

நாயின் சத்தத்தைக் கேட்டு வெளிவந்த மைனர் முதலியார் "அடடே! சுப்பையாவா?. வாப்பா.. உள்ளே " என்று அருமையோடு அழைத்தார். நாயின் உறுமலைக் காண்டு ஒதுங்கி நின்ற சுப்பையாவைக் கண்டு, மைனர். லேசாகச் சிரித்து விட்டு, நாயைச் சொடுக்கு விட்டு அருகே அழைத்து, "என்ன வெள்ளை! உனக்கு ஆள்கூட இனம் தெரியிலியா? இவனும் நம்மளவந்தான்!" என்று