பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

265


ஆனாலும் கீழே இறங்கித்தானாக வேண்டும் என்ற உண்மையை அந்தப் போராட்டம் அவனுக்குப் புலப்படுத்தியது.

அது போலவே, அவன் பழகிவந்த நெசவாளர் வட்டாரத்திடையேயிருந்தும், மக்கள் சக்தி என்னும் மகாசக்தி வாய்ந்த ஆயுதத்தின் பலத்தை அவன் இதய பூர்வமாக உணர்ந்தறிய முடிந்தது. மதுரை நகரத்திலுள்ள நெசவாளிகள் ஏற்கெனவே தங்கள் சங்கத்தில் ஒன்றுபட்டு நின்று, உரிமைக்காகப் போராடி வெற்றிகண்ட வீரர்கள் முந்திய காலங்களில் நூலுக்குப் பஞ்சம் ஏற்பட்ட போதும், கள்ள மார்க்கெட் மலிந்திருந்த போதும், அவர்கள் நூல் ரேஷனுக்காகவும், நூல் ரேஷன் கார்டுக்காகவும் போராட்டம் நடத்தி, வெற்றி கண்ட மக்கள், வர்க்க பலத்தின் ஒருமித்த சக்தியின் வலிமையை அனுபவ பூர்வமாகக் கண்டறிந்தவர்கள் அந்த நெசவாளிகள். சங்கத்தின் கொடியின் கீழ் ஒன்று திரண்டு நின்று, நெசவாளர்களின் பிரச்னைகளுக்காகப் பாடுபடுவதை அவன் நேரில் கண்டான்; ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் அவர்கள் பங்கெடுத்துப் பணியாற்றும் உற்சாகம் மணிக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. அந்த நெசவாளர்கள் தாங்கள் பட்டினி கிடக்க நேர்ந்த போதும், சங்கத்திற்குத் தம்மாலியன்ற உதவி அளிக்க முன்வந்ததியாக புத்தியையும் சங்க உணர்வையும் அவன் அனுபவ பூர்வமாகக் கண்டறிந்தான்.

இவை மட்டும் அல்லாமல், ராஜுவின் கூட்டுறவும், அரசியல் ஞானமும் மணியைப் பெரிதும் வளர்த்து விட்டன; ராஜுவிடம் அவன் பற்பல நற்பண்புகளைக் கண்டான்; அவரது அன்பும் ஆதரவும் அவனைப் பெரிதும் ஆகர்ஷித்தன; அவரைத் தன் சகோதரர் போலவே மணி நேசித்தான். தன் இருண்ட கண்களைத் திறந்து உலகத்தின் உண்மையொளியைக் காட்டிய குருவாக அவரை மதித்தான். அவர் அவனோடு துன்ப துயரங்களைப் பங்கிட்டுக்