இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22



மைனா முதலியார் மோவாயைத் தடவியவாறே முகட்டைப் பார்த்தார். பிறகு இரண்டு ரூபாய் நோட்டைப் பையிலிருந்து எடுத்து நீட்டியவாறே, "இந்தா, இதை வச்சிக்க" என்று கூறினார்.

சுப்பையாவின் வாயெல்லாம் பல்லாய்த் தெரிந்தது. கிடைத்தவரையில் லாபம் என்ற ஆத்ம திருப்தியோடு அந்த நோட்டை வாங்கிஇடுப்பில் சொருகிக்கொண்டு வாசலுக்கு வந்தார். வாசலில் கிடக்கும் நாய்க்குப் பயந்து அரவ மில்லாமல் நடை இறங்கினார்.

நல்ல வேளையாக வெள்ளை நிச்சிந்தையாகத் துங்கிக் கொண்டிருந்து,


3

மாலை மணி ஐந்து இருக்கும்.

திருநெல்வேலி ஜங்ஷன் பிளாட்பாரத்தில் ஜனக் கூட்டம் நிறைந்து கலகலப்போடிருந்தது. சென்னைக்குச் செல்லும் பாஸ்ட் பாஸஞ்சர், செங்கோட்டை செல்லும் லோக்கல் போஸஞ்சர், திருச்செந்தூர் செல்லும் ஷட்டில் மூன்றும் தத்தம் பிளாட்பாரங்களிலே நின்று கொண்டிருந்தன, வயிறாரத் தண்ணீர் குடித்துவிட்டு வந்திருந்த ரயில் இஞ்சின்கள் புஸ்ஸென்று இரைந்து கொண்டு பச்சைக் கொடியின் அசைவை எதிர்நோக்கி நின்றன. டவுனுக்கு வந்த சரக்கு வாங்கிச் செல்லும் அயலூர்ச் சிறு வியாபாரிகள், கூடைகளைக் காலி பான்ணிவிட்டு வீடு திரும்பும் தூக்கு வியாபாரிகள், ஸீஸன் டிக்கட்டில் கல்லூரிகளுக்கு வந்து செல்லும் மாணவர்கள் மற்றும் பற்பல பிரயாணிகள் முதலியோர் சுறுசுறுப்போடு, அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள்.