இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


ஆடையணிகளிலிருந்து பரவிக் கமழ்ந்த 'கான்பூர் நைட்குயினி'ன் நறுமானமும், கூட்டத்தினரிடையே நிலவிய அமைதியும் பெரிய முதலாளியின் வருகைக்கு ஒருபவித்திரச் சூழ்நிலையை உண்டாக்கிக்கொடுத்தன.

தாதுலிங்க முதலியாரும் மைனர்வாளும் கூட்டத் தினருக்குத் தலைமை தாங்கும் பாவனையில் மத்தியில்போய் அமர்ந்து கொண்டனர். அங்கு நிலவிய அமைதியை மைனர் தான் முதலில் கலைக்கத் துணிந்தார்.

"வியாபாரிகள் எல்லாரும் வந்தாச்சா? இன்னும் வரணுமா?" :

"அநேகமாக வந்தாச்சி. கூட்டத்தை நடத்தலாம்" என்று ஒரு குரல் பதிலளித்தது.

தாதுலிங்கமுதலியார் முகத்தில் எந்தவிதமான பாவப் பிரதிபலிப்பும் இல்லாமல் கைலாச முதலியாரை நோக்கி, "என்ன கைலாச முதலியார்வாள், தறிகாரர்கள்ளாம் கூலி உசத்திக்கேக்கிறாங்களே. நீங்க என்ன சொல்லுதிய?" என்று கேட்டார்.

"கூடக்குறையன்னாலும் பாத்துக்குடுக்கவேண்டியது தான். இல்லேன்னு சொல்லிற முடியுமா?" என்றார் கைலாசம்.

கைலாச முதலியாரையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த மைனர்வாளின் முகம் சட்டென்று வக்கிர உச்சம் பெற்றது. உடனே அவர் "இந்தத் தறிகாரர்களே இப்படித்தான். இதே வழக்கமாப் போச்சு. நூல் விலையானா, நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போவுது. கூலியையும் உசத்திக் குடுத்துட்டா, அப்புறம் சரக்கு நகர்ந்த காலத்திலேதான் நிசம்!" என்று அடித்துப்பேசினார்.

"வாஸ்தவம்தான். ஆனால் நூல் விலை ஏறுதுங்கிறதுக்காக, கூலியைக் குறைச்சிச் சரிக்கட்ட முடியுமா? நாலஞ்சு வருஷத்துக்கு மின்னே கிடைச்ச