இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


கூலியலே, இப்போ தறிகாரங்களுக்கு அரைவாசிகூடக் கிடைக்கல்லே. இன்னிக்கி இருக்கிற விலைவாசியிலே அவங்க பாடும் ஒடியடைய வேண்டாமா?" என்றார் கைலாசம்.

"எல்லாம் பெரிய முதலாளி பார்த்துச் சொன்னா, சரிதான்" என்று பொறுப்பைத் தாதுலிங்க முதலியாரிடம் தள்ளிவிட முனைந்தார் ஒருவியாபாரி.

பிரச்சினை தாதுலிங்க முதலியாரிடம் கைமாறு வதற்குள் ஒரு சிறு வியாபாரி முந்திக்கொண்டு பேச முனைந்தார்; "அவாளுக்கு என்ன? நம்மைச் சொல்லுங்க. நமக்கும் தறிகாரர்களை வச்ச வாழ்வு; தறிகாரர்களுக்கும் தம்மை வச்ச வாழ்வு. கொஞ்சம் அனுசரித்துத்தான் போகணும், இல்லேன்னா, தறிகாரங்கள்ளாம் ஒண்ணு கூடிக்கிட்டு ஏதாவது தப்புத் தண்டான்னு ஆரம்பிச்சா, நம்பயாபாரமே தொலைஞ்சிது!"

இந்தப் பேச்சைக் கேட்டவுடன் தாதுலிங்க முதலியார் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்: "என்னய்யா பேசறிங்க? இப்ப மட்டும் வியாபாரம் ரொம்ப வாழுதாக்கும். வர வர ஜவுளி ஏத்துமதியே அத்துப்போச்சி, வியாபாரமோ நடக்கல்லெ. சரக்கெல்லாம் இடிச்சிவச்ச புளி மாதிரி இருக்கு, நூல் விலையோ ஏறுது கூலி உசத்திக் குடுக்கிறதுக்கு என்ன நியாயம் இருக்கு?”

தாதுலிங்க முதலியாரின் அதிகார மிடுக்கு நிறைந்த பேச்சு மைனர் முதலியாரின் வாயையும் திறந்து விட்டது."சிலபேர் குடுத்துக்குடுத்து வழக்கம் பண்ணப்போய்த்தான் தறிகாரங்களும் கூத்தாடுறாங்க" என்று கூறிவிட்டு அர்த்த பாவத்தோடு கைலாச முதலியாரைப் பார்த்தார்.

கைலாச முதலியார் அந்தக்குறிப்பை உணர்ந்தவராக, "மனமறிஞ்சி இனத்தான் வயிற்றில் அடிக்கக்கூடாது" என்று கூறி நிறுத்தினார்.

நம்பயாபாரி இதாவது தான், தறிகாரர் அனுசரித்து தொவைக் கண்டான்