இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பதிப்புரை


தை, கவிதை, நாவல், இலக்கிய விமர்சனம் முதலிய பல்துறைகளிலும் தமக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்று வாசகர்கள் மனத்தைக் கவர்ந்தவர் ஆசிரியர் திருரகுநாதன்.

அவர் எழுதிய ‘பஞ்சும் பசியும்’ என்ற இந்நாவல் இலக்கியச் சாதனை வரலாற்றில்ஒருமைல்கல்;தமிழ் நாவல் இலக்கியப் பாதையில் ஒரு திருப்புமுனை; தமிழில் முற்போக்கு எதார்த்தவாத நாவல் இலக்கியத்துக்கு இதுவே முன்னோடி.

இந்நூலைப் பற்றி ஶ்ரீலங்கா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இலக்கிய விமர்சகரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர் க. கைலாசபதி தமது ‘தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற நூலில் இவ்வாறு மதிப்பீடு செய்கிறார்.

“சமுதாய இயக்க விதிகளையும் எதிர்காலச் சமுதாய வளர்ச்சியையும் நன்கு விளங்கிக் கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை மெய்ம்மையுடன் சித்தரிப்பவனே யதார்த்தவாதி- இத்தகைய சிறப்புமிக்க யதார்த்த இலக்கிய நெறி தமிழ் நாவலுலகிற் பெருவழக்குப் பெற்றுள்ளதெனக் கூற முடியாது- இந்த வகையில் தென்னகத்தில் ரகுநாதனுடைய பஞ்சும் பசியும் ஒன்றுதான் விதந்து கூறத்தக்கது”.

மேலும், அயல்நாட்டு , மொழியொன்றில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிட்ப்பட்ட முதல் தற்காலத் தமிழ் நாவல் என்ற சிறப்பையும் பெற்றது. செக்கோஸ்லாவக்கியா அகடமியில் திராவிடவியல் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் கமில் ஸ்வலெபில்