இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


சாப்பிட்டு, வாழ்ந்து அனுபவித்தவள். காதுகளில் வைரத்தோடுகள் பளீரென்று மின்ன, கொசுவம் வைத்துக் கட்டிய கொறநாட்டுப் புடவை உடுத்தி, இட்ட அடி பதிய, எடுத்த அடி தயங்க அவள் நடந்து வரும்போது, அதில் ஒரு பெருமிதமும் நிறைவும் நிரம்பித்ததும்பும்.தர்மாம்பாள் வீடு நிறைந்த லக்ஷ்மியாகத்தான் விளங்கி வந்தாள். அவளுக்குத் தன் குழந்தைகளான சங்கரின் மீதும் கமலாவின் மீதும் அபார வாஞ்சை.அவர்கள் மனம் நிரம்பினால் அவள் மனம் நிரம்பிய மாதிரி.

தர்மாம்பாளுக்கும் தாதுலிங்க முதலியாருக்கும் இருபத்திரண்டுவருஷங்களுக்குமுன்னர் செல்வச்சிரஞ்சீவி சங்கர் சீமந்த புத்திரனாகப் பிறந்தபோது, அவர்கள் இருவரும் சங்கரைத் தங்கள் குலத்தை விளக்க வந்த கொழுந்தாகத் தான் கருதினார்கள். ஆனால், இப்போதோ தாதுலிங்க முதலியார் மட்டும் ஏகபுத்திரனை அந்தமாதிரிக் கருதவில்லை. குலத்தை விளக்க வந்த கொழுந்தாக . இருப்பதற்குப் பதிலாக, சங்கர் எங்கே கோடாலிக்காம்பாக மாறி விடுவானோ என்ற அரிச்சலும், தம் கனவுகளை யெல்லாம் பாழாக்கி விடுவானோ என்ற அங்கலாய்ப்பும் அவருக்கு இருந்து வந்தன. காரணம், சங்கர் முதலாளிக்குப் பிறந்த சின்ன முதலாளியாக இராமல், அரசியல் ஈடுபாடும், 'அபாயகரமான' கருத்துக்களும் கொண்டவனாக இருந்தான். அவனது அரசியல் ஈடுபாடு தாதுலிங்க முதலியாருக்குப் பிடித்த அரசியலாக இருந்திருந்தால், அவனை அவர் இதற்குள் ஒரு 'எம்பி' யாகவோ அல்லது குறைந்த படம் ‘எம்.எல்.ஏ.' யாகவோ ஆக்கிவிடுவதற்கு லட்சம் ரூபாய் வேண்டுமானாலும் செலவழித்திருப்பார். ஆனால் சங்கரோ என்னென்னவோ 'இஸங்'களைப் பற்றியெல்லாம் பேசும் இளைஞனாக இருந்தான். எங்கே யோ கிடக்கும் ருஷ்யாவையும் சீனாவையும் பிரமாதப் படுத்திப் பேசும்புள்ளியாக இருந்தான்.தன் தந்தை செய்யும் வியாபாரத் தந்திரங்களையெல்லாம், அவரையும் விடத் திறமையாகக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல், அவற்றை