இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


மேலும் வாய் கொடுத்துப் பரிகாசத்துக்கு ஆளாகாமல் கமலா வீட்டுக்குள் துள்ளி ஓடி மறைந்தாள்.

"ஏண்டாப்பா, அவ பொண்ணு மாதிரியில்லாம, பின்னே எப்படி இருப்பா? காலாகாலத்திலே அவளையும் ஒருத்தன் கையிலே பிடிச்சிக் கொடுக்க வேண்டியதுதானே" என்று வாய் நிறைந்த சொற்களோடு பதிலளித்தாள் தர்மாம்பாள்.

"ஏம்பா, கையிலே பிடிச்சிக் கொடுக்கிறதுக்கு அவ என்ன ஆடா, மாடா? அவள் இஷ்டப்பட்டவனை அவள் கட்டிக் கொள்ளணும். நான் ஒண்ணும் விளையாட்டாச் சொல்றேன்னு நினைக்காதே. ஆமா" என்று செல்லக் குரலோடும் அர்த்தபாவத்தோடும் பேசினான் சங்கர்,

"என்னமோடாப்பா. எல்லாம் நம்ம அந்தஸ்துக்கும் தகுதிக்கும் தகுந்த இடமாத்தான், பார்க்கணும். கமலாவின் அழகுக்கும் அந்தஸ்துக்கும் ஆயிரம் பேர் ஓடி வர மாட்டானா?"

"வருவான், வருவான். ஆனா, கமலா சம்மதத்தையும் தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணனும். சொல்லப்போனா, அவளேமாப்பிள்ளையைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளணும்."

தர்மாம்பாளுக்குச் 'சங்கரோடு மேலும் விவாதம் செய்து கொண்டிருக்க இயலவில்லை. எனவே சங்கரை மடக்குவதற்காக ஒரு கேள்வியைத் திடீரென்று கேட்டு வைத்தாள்.

"அது சரி.ஏண்டா,உன் கல்யாணம்?"

'அதுதான் சொன்னேனே. இந்தக் காலத்திலே பெண்ணே மாப்பிள்ளையைத் தேடிக் கொள்ளணும்; மாப்பிள்ளையே பெண்ணைத்தேடிக்கொள்ளணும். அந்தக் கவலை உனக்கு எதுக்கு?"என்று சொல்லி விட்டு, பதிலை எதிர்பாராமலே மாடிக்குச் சென்றான்.