இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


நின்றதைத் தொடர்ந்து கதவைத் திறந்து மூடும் சப்தமும் கேட்டது.

தாதுலிங்கமுதலியார் உள்ளேவந்தார்,

தாதுலிங்க முதலியாரைக் கண்டதும், கணக்கப் பிள்ளை மரியாதையோடு எழுந்து நின்று கும்பிடு போட்டார், கைலாச முதலியாரும் இருப்பிடத்தை விட்டு இறங்கியவாறே, அவரை வரவேற்றார்.

"வாங்க, வாங்க, ஏது திடீருன்னு என்று கேட்டு விட்டு, கணக்கப்பிள்ளையிடம் திரும்பி, "என்ன கணக்கப்பிள்ளே, அந்த வெத்திலைப் பெட்டியை எடுத்துக்கிட்டு வாரும்" என்று உத்தரவிட்டார்.

தாதுலிங்கமுதலியார்கூடத்தில் கிடந்தநாற்காலியில் அமர்ந்து கொண்டார்; உள்ளே சென்ற கணக்கப்பிள்ளை வெற்றிலைப் பெட்டியை ஒருபெஞ்சை இழுத்துப்போட்டு அருகில் வைத்தார்.

தகவல் அறிந்து வெளியே வந்த தங்கம்மாள் வாசல் நடையின் நிலையை ஒட்டி நின்றவாறே, அண்ணாச்சி வாங்க" என்று வரவேற்றாள்.

"ஆமம்மா" என்று மெல்லிய குரலில் பதிலளித்தார் பெரிய முதலாளி.

"ஏளா, தங்கம் அவுகளுக்குக் காப்பி கொண்டு வந்து கொடு" என்று மனைவியிடம் உத்தரவிட்டார் கைலாச முதலியார்.

"காப்பியா?" பெரிய முதலாளி வாயெல்லாம் பல்லாய்த் தெரிய லேசாகச் சிரித்தார். "காப்பி கீப்பி ஒண்ணும் வேண்டாம். காப்பியே சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் உத்தரவு, 'ஸுகரே' சேத்துக்கிடக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்" என்று சொன்னார். தாதுலிங்க முதலியாரின் பெரிய மனுஷத்துவத்தை அவரது பியூக் காரும், பணமும் மனுஷத்தனத்துக்குக்குரியதான் 'டயபெட்டீஸ்'