இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


நம்மக் கிட்டே ஆறேழு மாசச் சம்பளத்தையும் வசூல் பண்ணி விட்டு, இடைவழித் தட்டிலே வடிகட்டி நிறுத்தினா? எதுக்கு இந்த ஸெலக் ஷன்?" என்று அங்கலாய்த்தான் ஒரு ஹைஸ்கூல் மாணவன்.

"தம்பி,எதற்கென்று நீ ஒருத்தன் கேட்டாபோதுமா? கேக்கணும்; உன்னோடொத்த மாணவர்கள் எல்லோரும் கேக்கதும்; உள்லனக்கஷ்டப்பட்டுப்படிக்கவைக்கிறாரே, உன் அப்பா அவர் கேட்கணும். எல்லோருமாச் சேர்ந்து இந்தச் சர்க்காரைக் கேக்கணும். நாம் ஒன்றுபட்டால் தானப்பா இந்த ஊழலையெல்லாம் ஒழிக்க முடியும்" என்று கூறினான் சங்கர்.

"சரி, சரி. புறப்படுங்க. நேரமாகுது. சங்கரிடம் நீங்க பேச்சுக் கொடுத்தால், அவன் இப்போதைக்குள்ளே ஓய மாட்டான்" என்று குறுக்கிட்டுப் பேசினான் மணி.

"என்ன மணி, என்னை என்ன அதிகப்பிரசங்கின்னா சொல்றே?" என்று கேட்டான் சங்கர்,

"இல்லையப்பா. நீ சின்னப் பிரசங்கிதான். இருந்தாலும் பிரசங்கம் பிரசங்கம்தானே!"என்று கிண்டல் செய்தான் மணி.

சங்கர் அதற்குப்பதிலேகூறாமல், சிரித்துக்கொண்டே கோர்ட்டுக்கு அருகில் நின்ற மோரீஸ் மைனர் காரில் ஏறி உட்கார்ந்தான்; காரை ஸ்டார்ட் பண்ணியவாறே "யாராவது வர்ரீங்களா என்ன மணி, நீ?" என்று கேட்டான்.

"இல்லை சங்கர், நாங்கள் நடந்தேவருகிறோம்.நீ போ" என்று வழியனுப்பினான் மணி.

மோரீஸ்மைனர் அங்கிருந்து அகன்று சென்றது.

மாணவர்கள் அனைவரும் தங்கள் கையிலிருந்தபாட் மிண்டன் மட்டைகளை அலங்காரமாக வீசியாட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி, ரோட்டுப் பாதைக்கு வந்தனர்.