இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


"எந்த லட்சாதிபதி வீட்டிலோ.?" இந்த வார்த்தையைக் கேட்டதும் மணியின் மனம் இன்னதென இனம் காண முடியாதபயத்தால் ஒருகணம்சிலிர்த்து நடுங்கியது. அந்தப் பயத்தைப் போக்குவதற்காக அவள் அந்த வார்த்தைக்குப் பதில் வார்த்தை தேட முனைந்தான்.

"கமலாவே யாரையேனும் விரும்பக் கல்யாணம் செய்து கொள்ள முள் வந்தால்? இவ்வளவெல்லாம் பேசு கிறவள் பணத்துக்கு ஆசைப்பட்டுத் தன் தந்தைக்குப் பணிந்து விடுவாளென்றா சொல்கிறாய்?" என்று தனது மனத்தை உறுத்திய சந்தேகத்தைத் சங்கேதமாக வெளியிட்டான் மணி.

"வாஸ்தவம்தான். பெண்கள் சம்மதிச்சால் விஷயம் முடிந்த மாதிரிதான்!" என்று ஆமோதித்தான் வேறொருவன்.

"என்னப்பா, நீ உலகம் தெரியாமல் பேசறே? இப்போ நடக்கிறகல்யாணங்கள் எல்லாம் பெண்களின் சம்மதத்தைக் கேட்டா நடக்குது? தாதுலிங்க முதலியாராப் பார்த்து கமலாவை எந்தக் கிணற்றில் தள்ளினாலும் அவள் விழவேண்டியவள்தானே! நம்ம நாட்டுப் பெண்களின் நிலை அதுதானே!" என்று உலக வழக்கை உபதேசித்தான் வேறொருவன்.

இதைக் கேட்டதும் மணியின் உள்ளத்திலிருந்த குதூகலமெல்லாம் குடியோடிப் போய்விட்டது. கையெட்டுத் தூரத்தில் தோன்றிய ஓர் அதிர்ஷ்டம் திடீரென்று காதவழி சாரத்திற்கு ஓடி விட்டதுபோல் ஒரு பிரமை தட்டியது.

"நீ என்ன இப்படிச் சொல்றே? கமலாதான் தன் இஷ்டத்துக்கு மாறாக நடக்கச் சம்மதிப்பாளா? இல்லை, அவள் அண்ணன் சங்கர்தான் அதற்கு இடங்கொடுப்பானா" என்று கேட்டான் மணி.

"மலைவிழுங்கி மகாதேவனுக்குக் கதவு ஒரு அப்பளம். தாதுலிங்க முதலியாரிடம் எந்தப் பாச்சாவும் பலிக்காது. அவரை நமக்குத் தெரியாதா?" என்றான் முதலில் பேசிய மாணவன்.