பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

பஞ்ச தந்திரக் கதைகள்


மறுநாள் பொழுது விடிந்து கதிரவன் தோன்றியவுடன், காக அரசன், ஆலமரத்தின் கீழ் தன் கூட்டம் கொலைபட்டு மலைபோல் கிடப்பதைக் கண்டது. அவற்றின் மத்தியில் தனது பெரிய மந்திரிகளான ஐந்து காகங்களும் மற்ற சில காகங்களும் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டு காக அரசன் ஓரளவு மகிழ்ச்சி கொண்டது.

உயிர் பிழைத்த காகங்களையும் தனது மந்திரிகளையும் அரச காகம் ஒன்று திரட்டியது. நம் குடியே அழியும்படியாக இப்படி நேர்ந்து விட்டதே!’ என்று வருந்தியது. பிறகு, அவற்றைக் கொண்டு, காயப்பட்டுக் கிடந்த காகங்களுக்கெல்லாம், மருந்து வைத்துக் காயங்களைக் குணப்படுத்தச் செய்தது. இறந்து போன காகங்களுக்கெல்லாம் செய்ய வேண்டிய ஈமக்கடன்களைச் செய்தது. பிறகு, பொய்கையில் சென்று தலை முழுகிவிட்டு வந்தது. அரச காகம் உயிர் பிழைத்த மற்ற காகங்களுடன் வேறொரு மரத்திற்குக் குடிசென்றது. அங்கு சென்றதும், தன் அமைச்சர்களை நோக்கி ‘இப்பொழுது நாம் என்ன செய்யலாம்? உங்கள் யோசனைகளைச் சொல்லுங்கள்’ என்று கேட்டது.

‘அரசே ஒரு பகைவனை அவனைக் காட்டிலும் வல்லவர்களோடு சேர்ந்து வெல்லுதல் வேண்டும். அந்த முறை நடைபெறக் கூடாததாக இருக்குமாயின் அந்தப் பகைவனையே வணங்கி வாழவேண்டும். அல்லது அவன் வாழவிடக் கூடியவனாக இல்லாமல்