பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்

117

இல்லை. மொழியிலே இனிமையும் இல்லை. அகத்திலே அறிவும் இல்லை. இதை யாரும் நினைப்பதும் இல்லை. இதன் பெயரைச் சொன்னாலே நமக்கு எதிரிகள் அதிகமாவார்கள். இப்படிப்பட்ட மோசமான ஒன்றையா நாம் அரசனாக ஏற்றுக் கொள்வது?

‘அரசனாகத் தகுந்தவர்கள் நல்ல குணமுடைய பெரியவர்களே, அவர்கள் பெயரைச் சொன்னால், பெரும் பகைகளையும் வெல்லக் கூடிய வன்மை யுண்டாகும். அப்படிப்பட்ட பெரியவர்களைச் சேர்ந்தால் தான் ஒவ்வொருவனும் அவனுடைய கூட்டத்தாரும் மேன்மையடையலாம். சந்திரன் பெயரைச் சொல்லியே யானைகளின் படையை வென்று முயல் தன் இனத்துடன் இனிதாக வாழ்ந்திருப்பதைப் போல் உயர்வாக வாழ வேண்டும். அதற்கு அரசன் நல்லவனாக வாய்க்க வேண்டும்.

இதை யெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் எப்படி இந்தக் கோட்டானுக்கு முடிசூட்ட முகூர்த்தம் பார்த் தீர்கள்? உங்கள் எண்ணம் சரியாகவே யில்லையே.

'பாவிகள் மெளனிகளைப் போலவும், பல விரதங்களைக் காக்கும் பெரியவர்களைப் போலவும் தோன்றுவார்கள். உதவி செய்பவர்களைப் போலவும், உறவினர்களைப் போலவும் வந்து ஒட்டிக் கொள்ளுவார்கள். அவர்களிடம் ஏமாந்து சேர்ந்து விட்டால் எவ்வளவு மேன்மையுடையவர்களும் தப்பிப்