பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

பஞ்ச தந்திரக் கதைகள்

கொடுத்துப் பயன் கண்ட பார்ப்பனன் போல் இவனுக்கு உதவி செய்து நாம் இலாபம் அடையலாம் என்றும், 'பகைவருக்குப் பகைவன் நமக்கு நட்பாவான்’ என்றும் கூறியது.

அடுத்துக் கோட்டான் அரசன் பிராகார நாசன் என்ற தன் அமைச்சனைப் பார்த்து, 'உன் கருத்தை உரை' என்று கேட்டது.

'பகைவர்கள் நல்லவர்கள் போல் வந்தாலும் அவர்களை நம்பி விடக் கூடாது. நம்பினால் இரகசியத்தை விட்டுக் கொடுத்த பாம்புகள் போல் அழிய நேரிடும். வேடனைக் காப்பாற்ற எண்ணிப் புறாக்கள் இறக்க நேர்ந்தது போல், பகைவனைக் காப்பாற்ற நம் உயிரைத் தத்தம் செய்யவேண்டி வந்தாலும் வரும். பொன் எச்சமிடும் புறாவைக் காப்பாற்றப் போய் மூடப்பட்டம் பெற்ற அமைச்சனைப் போல், பகைவர்களைக் காப்பாற்ற முற்படுவோர் மூடராகி விடுவர். ஆதலால் பகைவன் என்று அறிந்த பின் ஒருவனை நம்புபவன், தானே சாகும்படியான நிலையை அடைவான். சிங்கத்தின் மோசம் அறிந்த நரியைப் போல் பகைவனை ஆராய்ந்து அவன் தீமையை விலக்கிக் கொள்வதே சிறந்ததாகும்’ என்று பல கதைகளை எடுத்துரைத்துக்காகத்தை நம்பக்கூடாதென்று வலியுறுத்தியது.

ஆனால், கோட்டான் அரசு அதன் அறிவுரையைத் தள்ளிவிட்டது. முன் கூறிய பல அமைச்சர்