பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்

129

விட்டு விட்டுச் சென்றதும், கொடிய பாம்பு தீண்ட உடல் பழுப்பு நிறம் கொண்டதும், நளனுடைய தீவினையின் பயன்தானே!

பாண்டவர் சூதாடி அரசை இழந்ததும், பாஞ்சாலி வாட்டமடைந்ததும், காட்டில் வாழ்ந்ததும் எல்லாம் அவர்களுடைய தீவினையின் பயன்தானே,

‘தன் செல்வம், நாடு, மகன், மனைவி எல்லாம் இழந்ததும், பறையனுக்கு ஊழியம் செய்ததும், தன்னையே அடிமையாக விற்றதும் அரிச்சந்திரனுடைய தீவினையின் பயன்தானே!

வினைப்பயனைக் கடந்தவர்கள் யாருமில்லை! அந்தக் கோட்டான்களினால் நம் குலம் அழிந்ததும், இருந்த இடம் பெயர்ந்ததும், இன்பம் இழந்ததும்’ மலையில் ஒளிந்து வாழ்ந்து வருவதும் எல்லாம் நம் தீவினையின் பயனே! இப்போது நீ நம் குலத்தினை வாழவைத்தாய்’ என்று மேகவண்ணன் பாராட்டியது.

எதிரிகளை ஒரு வேளை தலை மேல் துக்கி வைத்துப் பேசியும், தோள்மேல் தூக்கி வைத்துக் கொண்டாடியும் புகழ்ந்து, சமயம் வரும்போது வதைத் தொழிக்க வேண்டும். கருநாகம் தவளைகளைச் சுமந்து கடைசியில் கொன்றொழித்தது போல நடந்து கொள்ள வேண்டும். அரசர்களும் அமைச்சர்களும் அறிவுடையவர்களாக இருந்தால் என்றும் துன்பங்களை விலக்கி இன்பமாக யிருக்க லாம். இல்லாவிடில் கருநாகப் பாம்பிடம் ஏமாந்த