பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

பஞ்ச தந்திரக் கதைகள்

நேரமான பின் "நண்பா, ஈரலை எடுத்துக் கொண்டு விரைவில் வா!" என்று அழைத்தது.

" ஏ முதலையே, இன்னும் ஆசை வைத்துக் கொண்டு ஏன் காத்துக் கொண்டிருக்கின்றாய்? பசி யோடிருப்பவனுடைய நட்பில் ஆசை வைத்தால், பாம்பை நண்பனாக்கிக் கொண்ட தவளையைப் போல் துன்பப்பட வேண்டித்தான் வரும். உனக்கும் எனக்கும் உள்ள நட்பு இத்தோடு போதும். இனியும் நான் ஏமாறுவேன் என்று எதிர் பார்க்காதே.

"பெண்கள் பேச்சுக்குக் காது கொடுத்தவர்கள் ஏளனத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். நீயோ உன் பெண்டாட்டிக்காக என்னைக் கொன்று விடவே நினைத்து விட்டாய். இது மிகவும் தீது.”

இவ்வாறு குரங்கு சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த முதலையொன்று, "அரசி முதலை இறந்து விட்டது” என்று சொல்லியது.

தன் பிரிவால் தன் மனைவி இறந்து விட்ட செய்தியறிந்து முதலைக்குத் துக்கம் தாளவில்லை. அது குரங்கைப் பார்த்து, "நான் ஒரு பாவி. அருமை மனைவியையும் இழந்தேன். உன்னைக் கொல்ல நினைத்து உன் அருமையான நட்பையும் இழந்தேன்" என்று சொல்லி வருந்தியது.

"என்னைக் கொல்லும்படி சொன்ன உன் மனைவி பொல்லாதவன், அப்படிப்பட்ட தீயவள்