பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

பஞ்ச தந்திரக் கதைகள்

என்னை வெல்லக் கூடியவர்கள் யாருமே இல்லை. அப்படியிருக்க நீங்கள் என்னை வேலையை விட்டுப் போச் சொல்வது நீதியல்ல" என்று குயவன் வேண்டினான்.

“அற்பனே, சும்மா பிதற்றாதே! சிங்கத்தோடு சேர்ந்திருந்த நரிக்குட்டி தன்னைச் சிங்கம் என்று எண்ணிக் கொண்டு துள்ளியது போல், நீயும் வீரன் என்று கூறித் துள்ளாதே! உன் குலம் பிறர்க்கு வெளிப்படு முன்னால் ஓடி விடு’ என்றான் அரசன்

வேறு வழியில்லாமல், குயவன் தன் சேனாபதி உடைகளைக் களைந்து விட்டு அங்கிருந்து வேறொரு நாடு நோக்கிச் சென்று விட்டான்.

5. சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி

ஒரு காட்டில் ஆணும் பெண்ணுமாக இரண்டு. சிங்கங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றிற்கு இரண்டு குட்டிகள் இருந்தன. நாள்தோறும் ஆண் சிங்கம் ஏதாவது மிருகங்களைக் கொண்டு வந்து பெண் சிங்கத்திடம் கொடுக்கும். பெண் சிங்கம் அதைக் குட்டிகளுக்கு ஊட்டி அவற்றை அன்புடன் வளர்க்கும்.

இப்படி நடந்து வரும் நாளில் ஒரு நாள், உயிருள்ள ஒரு நரிக்குட்டியைக் கெளவிக் கொண்டு வந்து ‘இதை உன் குட்டிகளுக்கு உணவாகக் கொடு’ என்று சொல்லிக் கொடுத்து விட்டுச் சென்றது ஆண் சிங்கம். அந்த நரிக்குட்டி அழகாக