பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி

187


இருந்ததால் பெண் சிங்கத்திற்கு அதைக் கொல்ல மனம் வர வில்லை. அதைத் தன குட்டிகளோடு சேர்த்து அதற்கும் நல்ல உணவு வகைகள் கொடுத்து வளர்த்து வந்தது.

சிங்கக் குட்டிகளுடன் நரிக்குட்டியும் வளர்ந்து வந்தது. தாமாக இரை தேடக் கூடிய அளவு வளர்ந்ததும், அவை ஒரு நாள் காட்டுக்குள் புகுந்தன.

அப்போது அவை சென்ற வழியாக ஓர் யானை வந்தது. அதைக் கண்டவுடன் நரிக்குட்டி பயந்து ஒடியது. உடனே சிங்கக் குட்டிகள் இரண்டும் அதை நோக்கி, “இப்படிப் பயந்து ஓடுவது சரி தானா?” என்று ஏசிக் காட்டின.

“நான் ஒன்றும் பயந்து ஓடவில்லை. நான் எதற்குப் பயந்து ஓட வேண்டும்?’ என்றெல்லாம்