பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு

207

அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நீதிப் பாட்டு எழுதித் தன் படுக்கையில் தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டு வந்தான்.

முதலில் பலமாக உபசாரம் செய்த மாமனார் வீட்டில் நாளாக ஆக மாப்பிள்ளையை வெறுத்துப் பேசத் தொடங்கினார்கள். ஒரு நாள் அவன் மனைவியை அழைத்து, 'உன்கணவனுக்கு நீதான் புத்தி சொல்லக் கூடாதோ?’ என்று கேட்டார்கள்.

நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று அவள் அவர்களைக் கேட்டாள்.

‘இப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் செலவுக்கு என்ன செய்வது? கையில் பணம் இல்லையே என்று கேள் என்றார்கள்.

அவளும் தன் கணவனிடத்தில் அவ்வாறே கேட்டாள்.

உடனே வேதியன் மகன் தான் எழுதி வைத்திருந்த கவிதைச் சீட்டுக்களில் ஒன்றை எடுத்துக் கொடுத்து, 'இந்தா, இதை விற்றுப் பணம் பெற்றுக் கொள். இதன் விலை ஆயிரம் பொன்' என்று சொல்லிக் கொடுத்தான்.

அவள் அந்தச் சீட்டை வாங்கிக் கொண்டு போய்த் தன் அண்ணன் கையில் கொடுத்து 'இதன் விலை ஆயிரம் பொன்னாம். இதை விற்றுக் கொண்டு வாருங்கள்’ என்று கூறினாள். அவன் அந்தச் சீட்டை வாங்கிப் படித்துப் பார்த்தான். 'உண்மையில் இது ஆயிரம் பொன்னுக்கு மேலேயே