பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

பஞ்ச தந்திரக் கதைகள்

ஒன்றும் விசாரி யாமலே நின்று செயல்செய் வோர்களே பொன்று வார்கள் வீணிலே பொன்று வார்கள் வீணிலே!

நின்று விசாரித் தெதையுமே நினைத்துப் பார்த்துச் செய்பவர் ஒன்று செல்வம் கூடியே என்றும் இன்பம் காண்பரே! இதைப் படித்தவுடன், 'சரி, விசாரித்துப் பார்த்தே முடிவுக்கு வருவோம்’ என்று உருவிய வாளை உறையிலே போட்டு விட்டு வந்த வழியே திரும்பினான் வணிகன் ,

பொழுது விடிந்தவுடன் காலையில் அவன் தன் வீட்டிற்கு வந்தான். நெடுநாளைக்குப் பின் திரும்பி வந்த கணவனைக் கண்டதும் அவன் மனைவி, அவனைப் பணிந்தெழுந்து வரவேற்றாள். அவர்கள் மகனான அந்த இளைஞனும் அவன் காலடியில் விழுந்து வணங்கினான். வணிகன் தன் மனைவியை நோக்கி, 'இவன் யார்?’ என்று கேட்டான்.

'தெரியவில்லையா? நம் மகன்! நீங்கள் போகும் போது சிறுவனாயிருந்தான். இப்போது வளர்ந்து விட்டான்’ என்றாள் அவள்.

உடனே வணிகன் தன் அருமை மகனைக் கட்டித் தழுவிக் கொண்டான். பிறகு தான் புத்தி கெட்டதனமாக நடந்து கொள்ள இருந்தது பற்றிக் கூறி, இந்த