பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான்கு நண்பர்கள்

79

‘அந்தப் புறாவரசனிடம் உள்ளது போல் என்னிடமும் நீ நட்பாக இருந்தால், என் உயிருள்ள அளவும் நான் நட்பு மாறாமல் இருப்பேன். இது உண்மை. சூதாகச் சொல்லும் வார்த்தை அல்ல.

‘அலை வீசிக் கொண்டிருக்கும் கடல் பரப்பிலே, எரியும் கொள்ளிக்கட்டை போய் நுழைந்தால் கடல் நீரா வற்றி விடும்? கொள்ளித் தீ தானே அணையும். அறிவுள்ள மேலோரிடம் கோபம் பற்றி எரியாது. அவர்கள் கடலைப் போன்ற தங்கள் விரிந்த நெஞ்சால் அந்தக் கோபத் தீயை அணைத்து விடுவார்கள்’ என்று இலவமரத்துக் காகம் எடுத்துக் கூறியது.

‘உங்கள் காக்கைப் புத்தியே ஒரு நிலையில்லாதது. உன்னை நண்பனாகச் சேர்ப்பதால், என்னுடைய செயல்கள் ஒன்றும் ஆகப்போவதில்லை. மேலும் அவை கெட்டுத்தான் போகும். நானும் நீயும் எவ்வாறு கலந்து வாழ முடியும்?

'கப்பல் கடலில்தான் ஓடும். அதைத் தரையில் ஓட்ட முடியாது. தேர் பூமியின் மீது தான் ஓடும். அதைக் கடலில் ஓட்டிச் செல்லமுடியாது. சேரக் கூடாதவை சேர்ந்தால் அந்த உறவு திடமாக நிலைப்பதில்லை. கெட்டுப் போவதே தவிர அந்தச் சேர்க்கையால் ஆகும் சிறப்பு எதுவும் இல்லை.

'பெண்களிடத்தும், ஒழுக்கம் கெட்டவர்களிடத்தும் நியாயத்தை எதிர்பார்த்தும், தீயவர்களிடம் ஒரு