பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

பஞ்ச தந்திரக் கதைகள்

நன்மையைச் செய்து கொள்ள எதிர்பார்த்தும், நட்புக் கொண்டு அதனால் இன்பம் அடைந்தவர்கள் உலகத்தில் இல்லவே இல்லை. பாம்பை மடியில் கட்டிக் கொண்டவர்களைப் போல், அவர்களுக்கு எந்தக் கணமும் துன்பம் தாம் ஏற்படும் என்று எலி காகத்தின் உறவை மறுத்துரைத்தது.

'எலியே, நீ சொல்வது உண்மைதான். தீயவர்களின் உறவு ஒருக்காலும் சேர்க்கக் கூடாதுதான். ஆனால், என்னை ஒரு காக்கை என்பதற்காக ஒதுக்கித் தள்ளி விடாதே. நான் உனக்கு என்றும் உயிர் நண்பனாவேன். நீ என் நட்பை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளி விட்டால், நான் என் உயிரை விட்டு விடுவேன், சத்தியம்!

'செல்வத்தினால் மனிதர்களுக்குள் நட்பு உண்டாகும். ஒன்றாகக் கூடித் தின்பதால், பறவைகளுக்குள் நட்பு உண்டாகும். கோப புத்தியால் துட்டர்களுக்குள்ளே நட்பு உண்டாகி விடும்.

மென்மையான ஊசி காந்தத்தைக் கண்டவுடன் போய் ஒட்டிக் கொள்ளும். இரும்புத் துண்டுகளோ, நெருப்பில் கலந்து வருத்தப்பட்ட பின்பே ஒன்றாக ஒட்டிக் கொள்ளும். அது போல, கண்டவுடனே நல்லவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். தண்டனையடைந்த பின் ஒன்று சேர்ந்து புல்லர்கள் நண்பர்களாயிருப்பார்கள்.