பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான்கு நண்பர்கள்

91

போது அவரை நாம் காப்பாற்ற வேண்டும். நான் ஒரு வழி சொல்கிறேன். கேட்கிறாயா? என்று கேட்டது.

'காக்கையண்ணா , சீக்கிரம் சொல்லுங்கள்!' என்று மான் குட்டி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கக் கூறியது.

'அதோ , நமது குளம் அருகில்தான் இருக்கிறது. குளத்தை நெருங்கியவுடன் அதன் கரையில் நீ செத்ததுபோல் விழுந்து கிட. செத்த பிணத்தைக் கொத்துவதுபோல் நான் உன் மேல் நின்று கொத்திக் கொண்டிருக்கிறேன். இந்தக் காட்சியைக் கண்டதும் வேடன் உன்னைத் தூக்கிக் கொண்டு போக வருவான்.