பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
102

வாக்கினார். ஆனால் அது மணிக்கு 5 மைல் வேகத்தில்தான் பறக்கக் கூடியதாக இருந்தது.

ஆகாயக் கப்பல் என்பது வேறு; ஆகாய விமானம் (ஏரோப்ளேன்) என்பது வேறு.

ஆகாயக் கப்பலை வாயு நிரம்பிய பலூன்" என்று கூறலாம். ஆகாயக் கப்பலுக்கு இறக்கை கிடையாது, அதன் அடிப்புறத்தில் தொங்கும் தொட்டில் போன்ற பகுதி பிரயாணிகள் தங்குவதற்கு ஏற்ப விஸ்தாரமாக இருக்கும். ஆகாயக் கப்பலை முன்னே செலுத்த இஞ்சின் இருக்கும்.

ஆகாயக் கப்பல்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப்பட்டதாக இருந்தன. ஹைட்ரஜன் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. இக்காரணத்தினால் ஆகாயக் கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாயின; ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர்.

இதனால் ஆகாயக் கப்பலின் மவுசு குறைந்தது. அதற்குள்ளாக விமானங்களில் முன்னேற்றம் ஏற்பட்டு லிட்டன.

விமானத்தைத் தொடர்ந்து மனிதன் தளம் அமைத்து ராக்கெட் விடத்துவங்கினான். ரஷ்யாவைச் சேர்ந்த கே.இ. சியால் கோல்ங்கி என்னும் விஞ்ஞானி தான், ராக்கெட்டுகளின் இயக்கம்