பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
106

றைப் பார்த்து விட்டு சீனமக்கள் அது ஒரு தெய்வீகத் துடைப்பம்” என்று வர்ணித்ததோடு-உலகில் அதிகரித்துள்ள தீமைகளைப் பெருக்கித் தள்ள அது கடவுளால் அனுப்பப்பட்டது என்றும் கரு தினர்.

அதைத்தொடர்ந்து யுத்தம், வெள்ளம், பஞ்சம் ஆகியவை தோன்றக் கூடும் என்ற நம்பிக்கையும் பரவல்ாக ஏற்பட்டது.

நம் நாட்டில் தூம கேதுவின் வருகை பெரிய தீமைகளை விளைவிக்கும் என்று அரசர்களும், பொது மக்களும் அஞ்சினர். பொதுவில்-வால் மீனின் தோற்றம், பின் ஏற்படப்போகிற ஒரு துயர நிகழ்ச்சியின் அறிகுறி என்றே எல்லோராலும் எண்ணப்பட்டு வந்தது.

வால் மீன் என்றழைக்கப்படும் அந்த விண் மீன், வாயுக்கள் தூசிகள், பாறைச் சிதறல்கள் இவற்றால் ஆனவையே. சூரிய குடும்பம் உருவான போது அவற்றிலிருந்து எஞ்சிய துண்டங்களே இவை என்றும் கூறலாம்.

வால் மீனின் உட்பகுதி, 'கரு' என்னும் நியூக்ளியஸ் ஆகும். இதில் அடங்கியுள்ள வாயுக்களும், திடப்பொருட்களும் சூரியனின் வெப்பத்தாலும் கதிர் வீச்சினாலும் எதிர்ப்பக்கம் தள்ளப்-