பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
108



கி.பி. 1472-ம் ஆண்டுதான் முதன்முதலில் வானவியல் நிபுணர்கள் வால்மீன்களை வானியல் பொருட்களாகக் கருத ஆரம்பித்தனர்.

ஜெர்மானிய வானியல் விஞ்ஞானி "ஜோஹ னன் முல்லர்” என்பவரும்—அவரது மாணவர் ஒருவரும். ஒரு வால் நட்சத்திரத்தை அடையாளம் கண்டுகொண்டு, அவற்றிற்கும் நட்சத்திரங்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறித்துக் கொண்டனர். வானில் கற்பனையாக ஒரு கோட்டினை வரைந்து வால் நட்சத்திரத்தின் பாதையைக் குறித்தனர்.

கி.பி. 1577-ல் டச்சு நாட்டு விஞ்ஞானி டைகோ பிராஹோ' ஒரு புதிய வால் மீனைக் கண்டார். அவர், வால்மீன் இருக்கும் தொலை வினைக் கணக்கிட முடியும் என நம்பினார்,

ஒவ்வொரு இரவும் நட்சத்திரங்கள், மற்றும் வால் மீன்கள் தோன்றுமிடங்களைக் குறித்துக் கோண்டார். அதே போல மற்ற நகர் வானியல் விஞ்ஞானிகளின் ஆய்வினையும் குறித்துக்கொண்டார். அவரால் இடமாற்றத்தினை அறிய முடிய வில்லை. எனவே, வால்மீன்—சந்திரனிலிருந்து குறைந்த பட்சம் 4 மடங்கு தூரத்தில் இருக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

இந்தக் கண்டு பிடிப்புக்குப் பின்னர், வால் நட்சத்திரங்கள்—வால்மீன்கள்தான் என நிரூபன மாயிற்று.