பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
118


ஒரு திறமையான விஞ்ஞானியாக விளங்கிய ஹேலி மிகவும் இரக்க குணம் படைத்தவர். நட்புக்கு ஏற்றவர். நியூட்டனின் குணத்திற்கு நேர் மாறானவர். பிற்காலத்தில் அஸ்ட்ரானமர் ராயல்' என்னும் பட்டம் பெற்றவர்.

1736-ல் ஹேலி தமது அருமை மனைவியை இழந்தார். இந்தத் துயரத்தைத் தொடர்ந்து, அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆயினும் அவர் விஞ்ஞான ஆராய்ச்சியை விடவேயில்லை.

1682-ம் ஆண்டில் அவர் ஒரு பிரகாசமான விண்மீனைக் கண்டதிலிருந்தே அதனுடைய சுழல் பாதையைக் கணக்கிடும் முயற்சியில் ஈடுபட்டு உழைத்து வந்தார். இது எளிதாக அமையவில்லை.

இதற்காக அவர் பல ஆண்டுகள் இம்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். தனக்கு முன்னதாக உள்ள விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மூலம் கணிக்கப்பட்ட வால்மீன்களின் பாதைப்ற்றிய தகவல்களை சேகரித்து ஆராய்ந்தார்.

இது புதிய வால்மீனின் பாதையை அறிய உதவும் என நம்பினார். 1607-ல் கெப்ளர்பார்த்த அதே வால்மீன்தான் 1682-ல் மீண்டும் தோன்றியி ருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார் ஹேலி.