பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

அன்பார்ந்த சகோதரர்களே, நேற்று உலகநாதன் உங்களுக்கு உலகத்தாயின் கதையைக் கூறினான். இன்று நான் உங்களுக்கு என் தந்தை, வருணதேவரின் அம்சமாகிய நீரின் ஆற்றலையும், வலிமையையும், கருணையையும் பற்றிய கதையை சொல்கிறேன்.

"வானம் பொழிகிறது:
பூமி விளைகிறது"

என்பதை நாமெல்லோரும் அறிவோம். ஆனால், வானம் பொழிய வில்லையென்றால் என்ன ஆகும்?

நீரின்றி உயிரினங்கள் அழியும்: பயிர்கள் விளைய வழியின்றி வாடி மடியும். பூமி வறண்டு பாளம் பாளமாக வெடித்துக் காட்சியளிக்கும். பஞ்சமும் பட்டினியும் தோன்றி மக்கள் பசியால் மாண்டு மடிவர்.

உணவில்லாமற்கூடச் சிலநாள் வாழ்ந்து விடலாம்; ஆனால் நீரின்றி வாழவே முடியாது.

உலகை உயிர்த் துடிப்புடன் இயங்கவைப்பது நீர். அந்த நீரை நமக்கு வாரி வழங்குவது மழை. அந்த மழையின்றி இந்த உலகம் வாழ இயலாது. இதை நான் கூறவில்லை; உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் பெருமானே கூறி இருக்கிறார்.