பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

இதற்கு நேர்மாறாகவும் இயற்கை சில சமயம் விளையாடி விடுவதுண்டு.

தொடர்ந்து அளவிற்கு மீறிப் பெய்கிற அடை மழையினால் வெள்ளப் பெருக்கெடுத்து, ஊரைப் பாழ்படுத்தி, மக்களுக்கும், மாக்களுக்கும் அழிவு ஏற்படுத்துவதும் உண்டு. ஆனால் இதெல்லாம் எப்போதாவது ஏற்படுகிற நிகழ்ச்சிகள்.

வானத்திலிருந்து மழை பெய்தாலன்றி தண்ணிரை மட்டும் மனிதன், வேறு எந்தப் பொருளினின்றும் உற்பத்தி செய்துவிட முடியாது.

வானம் பொய்த்து, நீர்நிலைகள் வற்றினால், மனிதன் நிலத்தடி நீரை-அதாவது மழைக் காலங்களில் பூமிநீரை உறிஞ்சித் தன்னுள் சேமித்து வைத்திருக்கும் நீரை-ஆழமாகத் தோண்டி எடுத்துப் பயன் பெறுகிறான். அந்த நிலத்தடி நீரும் வற்றக் கூடிய சாத்தியம் உள்ளதே!

ஒவ்வொரு ஆண்டும் பூமியின் நீர்ப் பரப்பிலிருந்து 5,77,000 கன கிலோ மீட்டர் நீரைக் கதிரவன் ஆவியாக மாற்றி வானத்திற்கு அனுப்புகிறான். மற்ற இடங்களை விடக் கடலிலிருந்து தான் அதிகமான நீர் ஆவியாக மாறுகின்றது.

இதிலொரு விந்தையைப் பார்த்தீர்களா? கடல்நீர் இம்மியளவும் மனிதனுக்குக் குடிநீராகப்