பக்கம்:படித்தவள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 शाdf மறு வேலை பார் என்று சொல்லி இருப்பேன்; இதை நானே சொல்லிவிட்டேன்; அது தான் பிரச்சனை" என்றேன். "பொம்மனாட்டி பேச்சைக் கேட்டு நடப்பவன் ஒரு கம்மனாட்டி" என்று நானே சொல்லி விட்டேன். "டேய் நீ பொல்லாதவன்; என்னையே நீ தாக்கி இருக்கிறேன்னு நினைக்கிறேன்" என்றான். "நானும் விதி விலக்கல்ல” என்று ஆறுதல் கூறினேன். 3 என் பழைய தமிழாசிரியரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தெருவிலே போன வம்பை வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் தான் தமிழாசிரியர் என்பதை எளிதில் கண்டு பிடித்து விட்டேன். பழையகுடையை அவர் தவிர யார் வெய்யிலில் பிடித்துக் கொண்டு போவார்கள்; பழைய குடை இருக்கட்டும்; அவரைத் தவிர வேறு யார் இந்தக் காலத்தில் தெருவில் பட்டப் பகலில் குடை பிடிக்கப் போகிறார்கள்; அவரேதான்; புலவர் குப்புசாமியேதான். வந்தவுடன் "என்னாடா கம்மினாட்டி! எப்படி இருக்கிறே" என்று என்னை விசாரித்தார். சரியாக என்னிடம் மாட்டிக் கொண்டார். அவரை விடுவதாக இல்லை. அவர் எப்படி என்னைக் கம்மினாட்டி என்று சொல்லலாம்; அவர் வாபஸ் வாங்கித் தீர வேண்டும். அதாவது அதற்கு விளக்கம் சொல்லி ஆக வேண்டும். அவரை விடுவதாக இல்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/104&oldid=802380" இலிருந்து மீள்விக்கப்பட்டது