பக்கம்:படித்தவள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 107 "பின் அழுவதற்காகவா போவார்கள்: கொஞ்சம் நேரம் அவன் அவன் தன் பெண்டாட்டியையும், அவள் அவள் தன் புருஷனையும் மறந்து சிரிப்பதற்கு ஒரு வாய்ப்பு: அவ்வளவு தான்" என்றாள். அழுவதா சிரிப்பதா என்று தோன்றவில்லை. "நாடகம் சமூக நாடகமா? குடும்ப நாடகமா” என்று கேட்டு வைத்தேன். "நடிகர்கள் நடத்தும் நாடகம்; அது சமூகமா குடும்பமா எனக்குத் தெரியாது” என்றாள். "இரண்டுக்கும் வேறுபாடு?" "குடும்ப நாடகம் கலியாணத்திலே முடியும். சமூகம் விவாகரத்திலே முடியும். இதுதான் வித்தியாசம்" “விவாகரத்தை ஏன் விரும்புகிறார்கள்" "சும்மா ஒரு மாற்றம் தான்" அதற்கு மேல் அதைப்பற்றி மாற்றுப் பேசுவதற்கு நான் தயாராக இல்லை. - "சரி புறப்படு” என்றேன். "புடவை என்று எடுத்துக் கட்டிக் கொள்ள ஒன்றுகூடச் சரியாக இல்லை. எல்லாம் கிழவிகள் ஆகிவிட்டன. அது அது காஞ்சிபுரம் பெனாரஸ் என்று பெயர்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றன" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/109&oldid=802390" இலிருந்து மீள்விக்கப்பட்டது