பக்கம்:படித்தவள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 109 5 கோபி சைக்கிள் வாங்கிய புதுசு அதனால் அவனுக்கு அதன் மீது மவுசு பூ வைத்து அழகு பார்க்காத குறைதான்; அதைத் துடைத்துக் கொண்டே இருப்பான். "படிப்பைக் கெடுப்பதற்கு டிவிக்கு அடுத்தது இந்தச் சைக்கிள்தான்" என்று பாட்டி முறையிடுவாள். அவன் சைக்கிளில் 'பெல் இல்லாமல் இருந்தது. "ஏன்டா பெல் எடுத்து விட்டாய்?" என்றேன். "பேரீச்சம்பழம் அதுக்குக் கிடைத்தது. யாரோ அதைப் பயன்படுத்திக் கொண்டார்” என்றான். "வேறு ஒன்று மாட்டுவது தானே!" "அது இருந்தால் அதன் சப்தம் கேட்டு வண்டி முன் குறுக்கே விழுந்து சாலை மறியல் செய்து விடுகிறார்கள்". “ഥങ്ങി இல்லாவிட்டால் போலீசு பிடிக்குமே” "உண்மைதான்; Money இல்லாவிட்டால்தான் கேசு எழுதுவார்கள்: பெல் இல்லாவிட்டால் கவலைப்பட மாட்டார்கள்” என்கிறான். "இது என்னடா கெட்ட பழக்கம்" "தொட்டில் பழக்கம் இனித் தொடர்வது தானே. சுடுகாட்டுக்குப் போனால் கூட அங்கேயும் அவன் கையில் ஏதாவது இருக்கிறதா என்று பிரித்துப்பார்க்காமல் இருக்க மாட்டார்கள்" என்று கூறிச் சிரிக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/111&oldid=802396" இலிருந்து மீள்விக்கப்பட்டது