பக்கம்:படித்தவள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 113 அந்த மாதிரி இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை சொல்லாதவர்களை இரண்டு குட்டுகள் தலையில் வைக்க வேண்டும் என்ற அரிப்பு இருந்து கொண்டே வந்தது. அந்தக் கிழவிக்குப் பயந்தே பெல்லைக் கழற்றி வைத்துவிட்டேன் என்று மாற்று மணியின் கதையை ஆற்றி உரைத்தான் கோபி. கோபியின் பாட்டி வந்து வெளியே நின்று கொண்டு புது சைக்கிள்; கீழே போட்டு உடைக்கப் போறே, பத்திரம்" என்று கத்தினாள். "என்ன பாட்டி சைக்கிள்தானா முக்கியம்? பையன் உங்களுக்கு ஒரு பாக்கியம் அல்லவா?” என்று கேட்டேன். "பையன் எனக்கு முக்கியம்; அவனுக்குச் சைக்கிள் முக்கியம்; அதைச் சொன்னால்தான் அவன் கவனிப்பான்” என்று விளக்கினாள். "அண்ணனுக்கு அண்ணிமேலே ஆசை, அவளுக்குத் தான் வளர்க்கும் கழுதைமேலே ஆசை, கழுதைக்குக் குட்டிச் சுவர்மேலே ஆசை" என்ற பழமொழியை எங்கேயோ கேட்டது போல இருந்தது. பழமொழியை மாற்றிவிட்டேன் என்று நினைக் கிறீர்களா! சாதிப் பேர் சொல்வது சட்டப்படி குற்றம்; அதைத் தவிர்க்கிறேன்; அவ்வளவுதான். 6 என் சின்ன வயசு, இந்த மாதிரி கட்டுப்பாடுகள் இல்லாத காலம்; டியூஷன் என்பதே கண்டு பிடிக்காக காலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/115&oldid=802405" இலிருந்து மீள்விக்கப்பட்டது