பக்கம்:படித்தவள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் it 5 நல்ல அழகான குடும்பம்; பூவுக்குக் குரங்கைத்தான் பிடிக்குமாம், அது தன்னைப் பிய்த்துப் போடுவதால்; அழகு பார்த்துக் கொண்டிருப்பவனைப் பெண் நேசிப்பது இல்லை; அலங்கோலப்படுத்தி அனுபவிப்பவனைத்தான் அவளுக்குப் பிடிக்கும். அன்னாகரீனா தன் கணவன் கண்ணியமானவன்; மதிப்புக்கு உகந்தவன்; கவுரவமான மனிதன். அவளை எட்டி உதைக்கும் ஆண்மை தட்டிக் கேட்கும் தறுகண்மை அவனிடம் இல்லை. படிப்பு: இல்லாத பிடிப்பு: அவன் தன் மனைவியைக் கவனிப்பு வைக்க மறந்தான்; இத்தனைக்கும் அவள் ஐந்து வயது சிறுமியின் தாய்; அவளுக்கு எந்தக் குறையும் இல்லை. இளைஞன் ஒருவன் அவளுக்கு வளைஞன் ஆனான்; வயது வேறு பாட்டைக் காட்டியது. அக்காவின் சொக்காயைக் கிழித்துப் பார்ப்பதில் அவன் கணக்காக இருந்தான். சின்னத்தனத்தின் சிருங்காரத்தை அவள் விரும்பி அவனை அவள் ரீங்காரமிட்டாள். மது உண்ட வண்டு; மலரின் வண்ணத்தைக் கண்டு மயங்கவில்லை; குடித்தபின் அது போதை தெளிந்து தன் பழைய பாதை நோக்கிப் பயணம் செய்தது. அவன் அவளோடு ஒட்டவில்லை. வீட்டுக்கு வரத் தயங்கினாள். தான் ஆதிக்கம் செய்த வீடுதான் என்றாலும் ஒவ்வொன்றும் தன்னைத் தீண்டத் தகாதவளாக ஒதுக்குவது போலக் காட்டியது; கணவன் அவள் திரும்பி வந்ததையும் கவனிக்கவில்லை; தன் தொழில் கணக்கின் எழிலில் அழுந்திக் கிடந்தான். தான் சாக்ஸ் போட்ட சிறுமியின் சீறடிகள் வண்ணச் சித்திரம் எங்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/117&oldid=802409" இலிருந்து மீள்விக்கப்பட்டது