பக்கம்:படித்தவள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 प्लाdf "அதை அப்படியே கேட்டு வந்து அந்த வேகத்தில் 'இந்தச் சிகப்புவரம் நீ தரமுடியுமா? என்று கேட்டாள் என்னை." "அது என்னடா இது சிகப்பு வரம்?" "செவ்வரம் என்று கேட்டிருக்கிறாள். அதற்கு அவளுக்குப் பொருள் தெரியாமல் உளருகிறாள்" "செவ்வரம் என்றால் என்ன?” "செம்மை உடைய வரம் என்பது பொருள். அதை அவள் சிகப்பு வரம் என்கிறாள்." "வரத்துக்குக் கூட நிறம் தீட்டப்பட்டு விட்டது” “காசா பணமா? நாலுவார்த்தை. அதற்குக் கூடவா பஞ்சம்? அவள் கெஞ்சிக் கேட்கும் போது வஞ்சகம் கொள்ளவில்லை." "அந்தச் சீதைக்குத்தான் தேவையில்லாத அவநம்பிக்கை உண்டாயிற்று. இராமனை நம்பாமல் போய் விட்டாள். சோபனா படித்தவள். அவளும் புத்திகெட்டு விட்டாளே” என்று கேட்டேன். அவன் அப்படியே அதிர்ந்து போனான். ஏன்? அவன் மனைவியைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு அல்ல; சீதையைப் பற்றி இதுவரை யாரும் இந்தக் கேள்வியைக் கேட்டது இல்லை. அதனால் அவ்ன் அசந்து விட்டான். என் மனைவியிடம் இதைப் பற்றிச் சொன்னேன். "அதுக்குத் தான் இந்தப் பழைய இலக்கியங்களைப் புரட்டக் கூடாது" என்று கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/124&oldid=802424" இலிருந்து மீள்விக்கப்பட்டது