பக்கம்:படித்தவள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 शााd கூறுவதுபோல் கொலைகளின் எண்ணிக்கைகள் தாள்களில் வெளிவருகின்றன. யார் யாரைக்கொலை செய்வது ஏன் கொலை செய்வது என்று காரணமே இல்லாமல் போய்விட்டது. அதுமாதிரி இன்று வெடி வைக்கும் எந்திரக் கூட்டுக் கொலைகளைத் திட்டமிடுகின்றனர். நகரங்கள் அதிர்கின்றன. கொலை என்பது காட்டுமிராண்டித்தனம்: வலிய மிருகம் எளியதைக் கொன்றது. வலியவன் எதிரியைக் கொன்றான்; இவள் எனக்கு எதிரியா? பகையா? ஆசாரத்துக்கு மாறுபட்டவளாக மாறி இருக்கலாம்; அதற்கு எதிரியாக இருக்கலாம். எனக்கு எதிரி அல்ல. மனைவி ஒருவனுடைய 2–6õOL-60) LO என்று கருதப்படுகிறது. அவள் மற்றவனுக்கு உரிமையாகி விடுகிறாள் என்பதை இவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவளைக் கொலை செய்து விடுகிறான். அதனால் என்ன நன்மை; உடைமையையே இழக்கிறான். அதுவும் நியாயமாகப்படவில்லை; ரயில் தடம்புரண்டால் அதை நிமிர்த்தி மறுபடியும் ஒடச் செய்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வண்டியைத் துக்கி யாரும் எறிந்து விடுவது இல்லை. மறுபடியும் நினைத்துப் பார்க்கிறேன். சின்ன வயதில் பள்ளிக்கூடம் போகாமல் மட்டம் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்கச் சென்ற கொலை நிகழ்ச்சியை. அவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தான். சட்டம் அவனுக்குப் பாதுகாப்புத் தராமல் அவனை வெளியேவிட்டால் அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/132&oldid=802442" இலிருந்து மீள்விக்கப்பட்டது