பக்கம்:படித்தவள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 135 "கிளப்புகளுக்குப் போகிறேன்" என்றான். "ரொம்பவும் முன்னேற்றம்தான்." "சோபனாதான் என்னை அனுப்பி வைக்கிறாள்; அவள் அதிகம் வீட்டில் தங்குவது இல்லை. வீட்டில் போர் அடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டாம். கிளப்புக்குப் போய்ப் பொழுது போக்கிவிட்டுவா என்று அனுப்பிவிடுகிறாள்" என்றான். "அங்கே குடிக்கிறார்களாமே." "அதுக்குத்தானே போகிறோம்; கம்பெனி கிடைக்கிறது." "இன்னும் வேறு சில விஷயங்கள் கேள்விப்படுகிறேன்." ೨೧೯r சிரித்தான்; பதில் சொல்ல வில்லை. "என் நடிப்பைக் கண்டு பலர் திரைப்படத்துக்குக் கூப்பிடுகிறார்கள்; மறுத்துவிட்டேன்” என்றான். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருந்தது. அது ஆனந்தன் முடிவு செய்ய வேண்டியது என்று பேசாமல் இருந்து விட்டேன். 12 தமிழாசிரியரைச் சந்தித்தேன். ஓர் அறிஞரோடு பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. "அறிவுப்பசி எது வரை இருக்கும்? என்று கேட்டேன். "அதற்கு எல்லையே கிடையாது" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/137&oldid=802449" இலிருந்து மீள்விக்கப்பட்டது