பக்கம்:படித்தவள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 141 "ஆசாரம் என்றால் என்ன?" என்ற வினாவைக் கேட்டு விட்டான். இவ்வளவு புத்திசாலியாக இருப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. "இந்தச் சொல் எங்கே வருகிறது?" என்று கேட்டேன். "ஆசாரக் கோவை” என்று சட்டென்று ஆசிரியர் உடைத்து விட்டார். "எங்கள் தமிழ் நூல் பாடம் இது” என்றான். "கலாச்சாரம்" என்றால் என்ன என்ற விரிவான பொருளையும் கேட்டேன். "ஆசாரம் என்பது பொதுவாக நம் முன்னோர்கள் அறிவித்த நெறிமுறைகள். அவர்களை ஆசாரியர்கள் என்று அழைத்தார்கள். அவர்கள் வகுத்துக் கொடுத்த நெறி வகைகள்: அதன்படிதான் மக்கள் பொதுவாக இயங்கி வருகிறார்கள். சில சமயம் உண்மையை விட்டு விட்டுச் சடங்குகளை மட்டும் பிடித்துக் கொண்டு இவைதாம் ஆசாரங்கள் என்று தொடர்வதும் உண்டு; உண்மை எது போலி எது என்று தெரியாமல் போவது உண்டு. கலாச்சாரம் என்பது கலைகள் மூலமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டவை. தனிப்பட்டவர் பின்பற்றிய நெறிகள் கலைகள் மூலமாகப் பிறருக்கு அறிவிக்கப்பட்டு அவை ஆசாரங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/143&oldid=802456" இலிருந்து மீள்விக்கப்பட்டது